டெல்லி: மோடியின் ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாமல் இந்தியப் பொருலாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்வது என்பது எப்படி சாத்தியம் என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தொடங்கி pஅலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜனும் இந்த கேள்வியை எழுப்பி இருப்பது தான் பிரச்னையின் வீரியத்தைக் காட்டுகிறது.
அதுவும் இந்திய பொருளாதாரம் சராசரியாக 7% வளர்ச்சி கண்டிருக்கும் போது அதற்கு தகுந்தாற் போல வேலைவாய்ப்புகளும் அதிகரித்திருக்க வேண்டுமே..? என கேள்வி எழுப்பி பலரின் சந்தேகம் சரி தான் என்பதை உறுதி செய்திருக்கிறார் ரகுராம் ராஜன்.
இந்த நிதி ஆண்டுக்கு 7%
சமீபத்தில் தான் இந்திய மத்திய புள்ளியியல் அலுவலகம், இந்திய பொருளாதார ஜிடிபி கணிப்பை வெளியிட்டது. அதில் 2018 - 19 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருக்கும் என கணித்திருந்தது.
இவைகள் தான் காரணம்
இந்த 7.2 சதவிகிதம் என்பது கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் காட்டிய 6.7 சதவிகித பொருளாதார வளர்ச்சியை விட 0.5 சதவிகிதம் அதிகம். இந்த 0.5% பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இந்தியாவில் அதிகரித்திக்கும் விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளின் வளர்ச்சியைச் சொல்லி இருக்கிறது.
Pew Research Center
அமெரிக்காவின் Pew Research Center என்கிற அமைப்பு இந்திய பொருளாதாரம் குறித்து சில சர்வேக்களை மேற்கொண்டிருக்கிறது. Pew Research Center நிறுவனம் மேற்கொண்ட சர்வேக்களில் 67 சதவிகிதத்தினர் இந்தியாவில் வேலைவாய்ப்பு மிக மோசமான நிலையில் இருப்பதாகவே சொல்லி இருக்கிறார்கள். வெறும் 21 சதவிகிதத்தினர் மட்டுமே மோடி அரசின் கீழ் வேலை வாய்ப்பு நிலையாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
பொருளாதார வல்லுநர்கள்
பொருளாதார வல்லுநர்களைப் பொறுத்த வரை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக இந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாக்கம் நடக்கவில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக தனியார் நிறுவனங்கள் தங்கள் பிசினஸ்களில் அதிகம் முதலீடு செய்து, பிசினஸ் வளர அதிகம் செலவழிக்காதது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற பொருளாதார நடவடிகைகளைச் சொல்கிறார்கள்.
சொதப்பல் திட்டங்கள்
ரியல் எஸ்டேட் துறையை வளர்க்க பாஜக அரசு கொண்டு வந்த RERA சட்டம், ஒரே நாடு ஒரே வரி எனக் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி போன்றவைகள் நேரடியாக பொருளாதாரத்தை பாதித்திருக்கிறதாம். இந்த இரண்டு பிரச்னைகளோடு பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளும் சேர்ந்ததால் விவசாயத்தில் சுணக்கம், ரியல் எஸ்டேட் துறையில் மந்த நிலை போன்றவைகளும் நிலவுவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
எல்லாம் வீண் தானா
ஆக ஒட்டு மொத்தத்தில் மோடி அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, ரெரா போன்ற விஷயங்களில் நன்மையை விட தீமை அதிகம் இருப்பதாகவே சொல்கிறார்கள். இந்த பிரச்னையோடு பொருளாதார வளர்ச்சிக்கு தகுந்தாற் போல வேலைவாய்ப்புகள் வேறு இல்லாததை ஒரு பெரும் பிரச்னையாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications