கரடி வருது கரடி வருது வழிய விடுங்க.. உறைவிடமாக மாறிய டீ எஸ்டேட்கள்.. அழியும் தொழில்!

ஊட்டி: ஊட்டி அதை சுற்றியுள்ள பகுதிகளான குன்னூர், கோத்தகிரி மஞ்சூர், கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை உற்பத்தி மிகவும்குறைந்து வருகிறது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

முந்தையகாலகட்டங்களில் தேயிலை தோட்டக்காரர்களிடம் இருந்தவிழிப்புணர்வு என்பது தற்போதுள்ள இளையதலைமுறையினரிடம் இல்லை. அவரவர் மேல்படிப்பு படித்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை என பல முன்னனி நகரங்களில் வேலை செய்து வருகின்றனர்.

இதனால் அவர்களுக்கு ஊட்டியிலோ அல்லது அதைச் சுற்றியுள்ளபகுதிகளிலோ எஸ்டேட்கள் இருந்தால் அதை பராமரிக்கவோ இல்லை. விவசாயம் செய்யவோ நேரம் இருப்பதில்லை. ஏன் சில தலைமுறையினருக்கு அவர்களிடன் இடம் எங்கு இருக்கிறது என்று தெரிவதில்லை. இதனால் அவர்களுக்கு விவசாயத்தின் மகத்துவம் என்பது தெரிவதே இல்லை.

 புதர்காடுகளாக மாறி வரும் விவசாய பூமி

புதர்காடுகளாக மாறி வரும் விவசாய பூமி

நாளடைவில் அந்த விவசாய தோட்டங்கள் புதர் காடுகளாக மாறி வருகின்றன. மேலும் அவர்கள் நாளடைவில் தங்களது இடங்களை அப்படியே விட்டு விடுவதால் அங்கு பல வனவிலங்குகளின் உறைவிடமாகவும் மாறி போகிறது. இப்படி புதர்களாக மண்டிக்கிடக்கும் புதர்களை சுத்தம் செய்யும் போது பல வகையான பூச்சிகள் தாக்குகின்றன. இதனால் பலவகையான தொற்றுகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக மழைக் காலங்களில் அட்டை பூச்சிகளின் தொல்லை என்பது அளவே இருக்காது என்கின்றனர். இதனால் அதைச் சுற்றியுள்ள கிராமத்தில் வசிக்கும் மக்களும் பயத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

 வேலையில்லாத்திண்டாட்டம்

வேலையில்லாத்திண்டாட்டம்

இதனால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள், அதைக் கொண்டு செல்லும் வாகனங்கள், சுத்தம் செய்யும் தோட்ட தொழிலாளர்கள் என அனைவரும் ஒரு கட்டத்தில் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் பலரும் இடம் பெயர்ந்து வருவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. அப்படியே சில எஸ்டேட்களில் வேலை இருந்தாலும் அவர்களின் மெஷின்களின் மூலம் தேயிலை பறிப்பதால் 10 பேர் வேலை செய்யும் இடத்தில்5 பேருக்கு மட்டுமே வேலை உள்ளது.

 புதர்களை வெட்டும் தொழில்

புதர்களை வெட்டும் தொழில்

அப்படியே ஒரு எஸ்டேட் உரிமையாளர் லீஸ்சுக்கு தங்கள் இடத்தை விட்டாலும், அதை வாங்கிக் விவசாயம் செய்யும் வரும் விவசாயிகளுக்கு முதல்அடி மண்டிக் கிடக்கும் புதர்களை சுத்தம் செய்வதே. இதற்கு ஒரு 1 ஏக்கருக்கு ஒரு லட்சம் முதல் வாங்கப்படுகிறதாம். ஒரு ஏக்கருக்கு வருடத்திற்கு சுமார் 5000 கிலோ தேயிலை கிடைக்கும். இது முன்பெல்லாம் ரூ20- 25 வரை விலை போகும், ஆனால் இன்றைய காலகட்டங்களில் ரூ15 - 18 வரை மட்டுமே செல்கிறது. இதனால் விவாசாயிகள் கூலிகொடுத்து விவசாயம் செய்தாலும், உற்பத்தி செய்யப்படும் தேயிலைக்கு சாரியான ஆதரவு விலை கிடைப்பதில்லை. பின்னர் எதற்காக இந்தவேலை என்று நம்மையே கேள்விஎழுப்புகின்றனர்.

 ஆதாரவு விலையை நிர்ணயிக்க கோரிக்கை:

ஆதாரவு விலையை நிர்ணயிக்க கோரிக்கை:

ஊட்டியும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மக்கள் வாழ்வாதரத்தை கருத்தில் வைத்து அரசு, தேயிலையின் ஆதரவு விலையை நிர்ணயிக்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின்முதல் கோரிக்கையாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+