2000 ஏக்கர்.. சென்னையில் பிரம்மாண்ட உணவுப்பூங்கா அமைக்கப்படும்.. முதல்வர் பழனிச்சாமி உறுதி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாகப்பட்டிணம்: மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், சென்னையில் 2000 ஏக்கரில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

 

தேர்தல் நாள் நெருங்கி வருவதையடுத்து மத்தியிலும், மாநிலங்களிலும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளன. இதையடுத்து அனைத்துக்கட்சிகளும் பலவாறு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றன. குறிப்பாக புதிது புதிதாக அறிக்கைகளை கூறி வருகின்றன. மத்தியஅரசும் மாநில அரசும் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவதற்கு பல வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றன.

குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6000 என்று கூறியுள்ளது, இதுவே நடப்பில் உள்ள மோடி அரசு வருடத்திற்கு ரூ.6000 என்றும் அறிவித்திருந்தது, இது மூன்று பிரிவுகளாக மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று முன்னரே அறிக்கை வெளியிடப்பட்டது.

தங்கத்தில் ஓட்டு இயந்திரம்.. 2.30 மணி நேரம் தண்ணீரில் யோகா.. மாஸாக கலக்கு அதிமுக தொண்டர்!

தேர்தல்

தேர்தல்

தற்போது தமிழகத்தில், 39 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பலவாறு தங்களது பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

வாக்குறுதி

வாக்குறுதி

அதன் ஒரு பகுதியாக வேதாரண்யம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நீங்கள் மட்டும் தான் அறிக்கை கொடுப்பீர்களா? நாங்களும் கொடுப்போம் என்பதற்கு ஏற்ப நடைபெறும் மக்களவைதேர்தலில் அதிமுகவெற்றி பெற்றால், சென்னையில் 2000 ஏக்கரில் உணவுப் பூங்கா அமைக்கப்படும்என அறிவித்துள்ளார்.

எப்படி நடக்கும்
 

எப்படி நடக்கும்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற நிலையில், இதன் 2வது கட்டமாக வரும் ஏப்ரல் 18-ம்தேதியன்று தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேலும் அதே நாளில் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

முக்கியம்

முக்கியம்

இதற்காக அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் இருபெரும் பிரிவுகளாக உள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜகாவிற்கு 5 தொகுதியும், பாமாகாவிற்கு 7ம், தேமுதிகவிற்கு 4ம், புதிய நீதிக்கட்சி ஒன்றும்,, புதிய தமிழகம் கட்சிக்கு ஒன்றும் மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றும், மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுகவும் இணைந்து போட்டியிடுகிண்றன.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இதேபோல் திமுகவில் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்விடுதலை சிறுஇத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக், கொங்கு நாடு தேசிய கட்சி, இந்திய ஜனநாயக் கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுகவும் போட்டியிடுகின்றன. எது எப்படியோ எந்த கட்சி ஜெயிக்கிறதோ? ஆனால் மக்களுக்கு ஏதேனும் நல்லது நடந்தால் சரியே. கொடுத்த அறிக்கைகளை காப்பாற்றினால் நல்லதே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chief minister promises to make food Park in Chennai

Tamilnadu chief minister edappadi k. palanisamy announced today (Sunday march31) that an integrated food park will be set up in Chennai. Around 2000 acres in the park.
Story first published: Sunday, March 31, 2019, 13:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X