ஒரே கல்லில் மூன்று மாங்காய்.. ஜியோவின் ஜிகா பைபர் திட்டம்.. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஜியோ ஜிகா பைபர் டிரிபிள் பிளான், இந்திய பிராண்ட்பேன்ட் தொழில் நுட்பத்திற்கு பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மூன்று சேவைகளை ஒரே தொழில் நுட்பத்தில் தரும் வகையில் இந்த டிரிபிள் பிளான் தரப்படவுள்ளது.

 

ஜியோ ஜிகா பைபர் டிரிபிள் பிளானில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மிக குறைந்த விலையில் இந்த பிராண்ட்பேன்ட் சேவைகள் தரப்படவுள்ளன. ஒரு புறம் ஜியோ வாடிக்கையாளர்க்களூக்கு உதவியாக இருந்தாலும், மறுபுறம் மற்ற பிராண்ட்பேன்ட் நிறுவனங்கள் இதனால் மிக அதிக பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2000 ஏக்கர்.. சென்னையில் பிரம்மாண்ட உணவுப்பூங்கா அமைக்கப்படும்.. முதல்வர் பழனிச்சாமி உறுதி!

ஒரே கல்லில் மூன்று மாங்காய்?

ஒரே கல்லில் மூன்று மாங்காய்?

ஜியோ ஜிகா பைபர், ஜியோ ஹோம் டிவி, ஜியோ ஆப்ஸ் என முன்று சேவைகளையும் ஒரே பிளானில் தர உள்ளது. அதாவது வாய்ஸ் கால், டேட்டா, ஜியோ மெகா டிவி, ஜியோ ஹோம் டிவி, ஜியோ ஆப்ஸ்கள் என அனைத்து சலுகைகளும் தரப்படவுள்ளன. இது முதலில் ரிலையன்ஸ் ஊழிகளுக்கு இந்த சலுகைகளைக் கொடுத்து இதன் தரத்தினை சோதிக்க உள்ளதாம் ஜியோ. பின்னர் ஊழியர்களின் கருத்தை கேட்டு அதற்கேற்ப மாற்றி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாம் இந்த நிறுவனம்.

வேறு பிளானில் இருப்பவர்களும் மாறிக் கொள்ளலாம்

வேறு பிளானில் இருப்பவர்களும் மாறிக் கொள்ளலாம்

தற்போது ஜியோவின் பல்வேறு பிளான்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் , இந்த ஜிகா பைபர் டிரிபிள் பிளானிற்கு மாறிக் கொள்ள விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்றும் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

எவ்வளவு பயன்படுத்தலாம்?
 

எவ்வளவு பயன்படுத்தலாம்?

இந்த சிங்கிள் டிரிபிள் பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், , 100க்ப் வரை இண்டர்னெட் டேட்டா. , ஜியோ ஹோம் டிவியை பயன்படுத்தும் வசதியையும் இதோடு பெற்றுக் கொள்ளலாம். இத்தோடு ஜியோ ஆப்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த மூன்று சேவைகளுக்கும் சேர்ந்து ஒரே கட்டணமாக கட்டி 28 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் தற்போது சோதனைக்காக எந்தவொரு கட்டணைத்தையும் பெறாமல் இந்த சேவையை வழங்க உள்ளதாம்.

முக்கிய அம்சம்

முக்கிய அம்சம்

இந்த டிரிபிள் பிளான் திட்டத்தில் உள்ள முக்கிய அம்சம் என்னவெனில் ஜியோ ஹோம் டிவி சேவைதான், இதில் ஜியோ சேவை மூலம் ஜிகா டிவி சேவையையும், ஜியோ ஹோம் டிவி சேவையையும் அளிக்க உள்ளது. இப்போதைக்கு இந்த ஜியோ ஜிகா பைபர் திட்டம் ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அளிக்க உள்ளது. இருப்பினும் விரைவில் அனைவருக்கும் இந்த சேவை கொண்டு வரப்படும் என்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.

இரண்டு ரூட்டர்களை கொண்ட ஜிகா பைபர்?

இரண்டு ரூட்டர்களை கொண்ட ஜிகா பைபர்?

ஏற்கனவே அறிவித்தது போலவே இந்த ஜியோ ஜிகாபைபர் திட்ட பயன்பாட்டாளர்கள் 2 விதமான ரூட்டர்கள் தரப்படும். ஒன்று பிராண்ட்பேன்ட் சேவைக்கு ம், மற்றொன்று ஜியோ ஜிகா டிவிக்கும் பொருத்தப்படும். இதற்காக ரூ.4500 செக்யூரிட்டி டெபாசிட்டாக பெறப்படும் என்றும், இதற்காக சர்வீஸ் சார்ஜ் எதுவும் இல்லை என்றும் ஜியோ கூறியுள்ளது.இதோடு மட்டும் அல்லாமல் ஜியோ டிவி காலிங்க் வசதியும் வரும் காலத்தில் இதில் இணைக்கப்படும் என்று ஜியோ அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance jio will offer jio gigafiber triple plan with voice broadband data offers

Reliance jio gigafiber triple plan will affect and distrupt the indian broadband industry. According to a report by telecom, jio gigafiber is testing a new triple play plan among its employees, which comes beundled voice calling benefit, broadband data, jio home tv or jio giga tv,also access all jio apps.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X