ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடியும் நிலையில் அதனை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க செப்டம்பர் 30ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்கும் ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார்டு ஏப்ரல் 1 முடக்கப்படும் என்றும் இதனால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் ரிட்டன் தாக்கல் செய்ய முடியாது என்று கூறப்பட்ட நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட பயன்களும், நாட்டின் அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், கடந்த 2009ம் ஆண்டில் ஆதார் எண் திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் படிப்படியாக அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக்கணக்கையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வலியுறுத்தியது.

மத்திய நேரடி வரிகள் வாரியமும் (Central Board of Direct Taxes-CBDT), ஆதார் எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 2016-17ம் ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் அனைவரும் தங்களின் பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் அறிவுறித்தியது.
2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த சட்டத்தின் படி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டது. எனினும் இதில் பல நடைமுறை சிக்கல்கள் எழுந்ததால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க முதலில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை அவகாசம் அளித்தது. பின், மார்ச் 31, 2019 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்டு முக்கிய ஆவணமாக இருப்பதால் ஆதார் எண்ணுடன் இதன் இணைப்பு கட்டாயமாகிறது. கடந்த ஆண்டு மட்டும் 11.44 லட்சம் பான் கார்டுகள் பல்வேறு காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று நேரடி வரி வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், காலக்கெடு செப்டம்பர் 30, 2019 வரை நீட்டிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்திருப்பது கட்டாயம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க மத்திய அரசு 6வது முறையாக காலக்கெடுவை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைக்க முட்டுக்கட்டையாக இருப்பது பெரும்பாலும், பான் எண் மற்றும் ஆதார் எண்ணில் இருக்கும் பிறந்த தேதிகளில் உள்ள வித்தியாசமே. இதன் காரணமாகவே பெரும்பாலானவர்கள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதில் கால தாமதம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications