இதய நோயாளிகளுக்கு பயன்படும் stent-களின் விலை மீண்டும் உயர்வு..!

டில்லி: இதய நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சையின் போது பொருத்தும் Stent-களின் விலையை 4.2 சதவிகிதம் வரை அதிகரிக்க மத்திய அமைச்சகம் அனுமதி கொடுத்திருக்கிறது.

இந்த விலை ஏற்றம் கடந்த 2018-ம் ஆண்டின் மொத்த பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் அதிகரித்திருக்கிறார்களாம்.

National Pharmaceutical Pricing authority - NPPA என்பிபிஏ என்கிற அமைப்பு தான் இந்தியாவில் மருந்துகளின் விலையை ஒழுங்குமுறை படுத்துகிறது. இந்த அமைப்பு தான் மத்திய அமைச்சகத்தின் சார்பாக மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துகிறது.

அந்த 2 ரகம்

அந்த 2 ரகம்

இதய Stent-களில் இரண்டு ரகங்கள் இருக்கின்றன. 1. Bare metal stent (BMS. இந்த ரக Stent-கள் வெறுமனே இதய குழாய்களை விரித்துப் பிடிக்கும். அவ்வளவே. 2. Drug eluting stent (DES) - இந்த ரக Stent-கள் வெறுமனே இதய குழாய்களை விரித்துப் பிடிப்பதோடு மட்டும் இல்லாமல் தேவையான போது மருந்துகளையும் உமிழும்.

புதிய விலை

புதிய விலை

இதய Stent-களின் விலை புதிய விலை ஏற்றத்துக்கு பின் BMS ரக stent-களின் விலை 8 ஆயிரத்து 261 ரூபாயாகவும், அதுவே DES ரக stent-களின் விலை 30 ஆயிரத்து 180 ரூபாயாகவும் நிர்ணயித்திருக்கிறது National Pharmaceutical Pricing authority (NPPA).

இன்றில் இருந்து

இன்றில் இருந்து

இந்த விலை ஏற்றம் ஏப்ரல் 01, 2019ல் இருந்து நடைமுறைக்கு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டில் கூட பிப்ரவரி மாதத்தில் தான் இந்த இரண்டு ரக இதய stent-களுக்கு விலை ஏற்றியது என்பிபிஏ அமைப்பு. BMS ரக stent-களின் விலையை 7 ஆயிரத்து 400 ரூபாயில் இருந்து 7 ஆயிரத்து 660 ரூபாய்க்கு உயர்த்தியது. அதேபோல DES ரக stent-களின் விலையை 27 ஆயிரத்து 890 ரூபாயில் இருந்து 30 ஆயிரத்து 180 ரூபாயாக அதிகரித்தது.

என்பிபிஏ-வின் கீழ்

என்பிபிஏ-வின் கீழ்

பிப்ரவரி 2017ஆம் ஆண்டில் தான் என்பிபிஏ அமைப்பு இந்தியாவில் இருக்கும் இதய நோயாளிகளின் நலன் மற்றும் அவர்களின் பொருளாதார நிலைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு stent-களின் விலையை 85% வரை குறைத்தது. 2017 ஆம் ஆண்டுக்கு முன்பு BMS ரக stent-களின் விலை 45 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் DES ரக stent-களின் விலை ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+