லண்டன்: செல்ல நாயை பார்ப்பதற்கு கூட வைர வியாபாரி நிரவ் மோடிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு இருக்கிறது.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மொஹுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல்வங்கில் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் கடன் பெற்று, அதைதிரும்ப செலுத்தாமல் வெளி நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டனர்.

நிரவ் மோடி தப்பிச் சென்ற பிறகு தான் போலீசுக்கு மோசடி விவகாரம் தெரிய வந்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறை நிரவ் மோடியை தேட ஆரம்பித்தது.
நிரவ் மோடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, முரட்டுமீசையை வளர்த்துக் கொண்டு லண்டனில் வைர வியாபாரம்செய்து வருவதாகவும், இந்த செய்தி பிரிட்டணில் உள்ள டெய்லி டெலிகிராப் செய்தித்தாளில் வெளியிட்டு உள்ளது.
லண்டனில் நிரவ் மோடி, புதிதாக வியாபாரத்தை தொடங்கியுள்ளதுடன், தாம் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே அலுவலகமும். வைத்துள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நிரவ் மோடி வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் மாத வாடகை மாதத்திற்கு 16.லட்சது 40 ஆயிரம் ரூபாய் எனவும் அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இதன் பின்னரே அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கேட்டார். ஆனால் அவருக்கு மார்ச் 29 வரை ஜாமீன் வழங்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் நடந்த வழக்கின் விசாரணையில் , மீண்டும் ஜாமீன் கேட்டார் நிரவ் மோடியின் வழக்கறிஞர். அதில் நீரவ் மோடிக்கு வயதான பெற்றோர் இருப்பதாகவும், அவரது வீட்டில் அவருக்கு பிரியாமான நாய் இருப்பதாகவும், அவர்களுக்காக நிரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதாகவும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications