மும்பை: கோடை நெருங்கி வருவதையொட்டி பள்ளி குழந்தைகள் விடுமுறையை ஜாலியாக கழிக்க பல நாடுகளுக்கு செல்வதற்கு, அதுவும் குடும்பத்தோடு செல்வதற்கு விமான டிக்கெட்களை பதிவுசெய்து வருகின்றனர். இதனால் கட்டணங்கள் உயர்ந்து விட்டன.
டிக்கெட்கள் அதிகளவில் பதிவுசெய்து வருவதால் டிக்கெட் விலை அதிகரித்த வண்ணம் உள்ளன. மூன்று காரணங்களால் டிக்கெட்களின் விலை அதிகரித்துள்ளது. அதிலும் இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது சற்றே அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் தற்போது தான் தனது பிரச்சனையில்இருந்து மீள தொடங்கியுள்ளது. மேலும் இந்த நிறுவனம் முழுவதும் அப்பிரச்சனையிலிருந்து வெளிவர ஏப்ரல் மாத இறுதியாகி விடும்.
புதிய விமானங்கள்
அதே சமயம் ஸ்பைஸ்ஜட் நிறுவனமும் தற்போது இயங்கி வரும் விமானத்திற்கு பதிலாக வேறு விமானத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும் மும்பை விமான ஓடுதளபரப்பும் இந்த மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் எனவும் விமானதுறை அறிக்கையில் கூறியுள்ளது.
கிராக்கி அதிகரிக்கும்
இது போன்ற பல காரணங்களால்விமானங்களுக்கு பல வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. தேவை அதிகம் உள்ள இந்தநிலையில் குறைவான விமானங்களின் எண்ணிக்கை விமான டிக்கெட்களின் விலைஅதிகரிப்புக்கு காரணமாய்உள்ளன.
கிரிசில் வெளியிட்ட அறிக்கை
இதுகுறித்து கிரிசில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு இதே காலான்டுடன் ஒப்பிடும் போது, நடப்பு காலாண்டில் 10 - 12% விலை அதிகரித்துள்ளது. மேலும் வருகின்ற சம்மர் ஹாலிடேஸ்ஸை ஒட்டி விமான டிக்கெட்களின் விலை மேலும் உயரவே வாய்ப்பு உள்ளது.
ரத்து கட்டணமும் அதிகரிப்பு
விமானடிக்கெட்கள் பதிவு செய்யப்பட்டு பின்பு, அதை ரத்து செய்தால் கட்டணம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. இது கடந்தஆண்டில் இதே காலாண்டில் 0.9 சதவீதமாகஇருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில்1.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. விமானடிக்கெட் தேவை அதிகரித்தாலும், அதற்கானவிமான வளர்ச்சி தற்போது இல்லாத நிலையில் விமான நிறுவனங்களை பாதிக்கும் என்றும் தெரிகிறது.
முந்தையா காலாண்டுடன் ஒப்பிட்டால்
மேலும் கடந்த ஜனவரி2019ம் ஆண்டு உள் நாட்டு விமானப் போக்குவரத்து சேவை கட்டணம் முந்தையகாலாண்டுடன் ஒப்பிடும் போது 9% அதிகரித்துள்ளது. இது உள் நாட்டு விமான டிக்கெட்களின்விலை அதிகரிப்பே என்கிறது ஐ.சி.ஆர்.ஏ- யின் ஆய்வுகள்.
யாத்ரா அறிக்கை
மக்கள் பொதுவாக டிக்கெட்கள் பதிவு செய்வதை கடைசி நிமிடங்களில் செய்வதால் டிக்கெட்களின் விலை 15 - 20% அதிகரித்துள்ளது. அதுவும் அதிகமான மக்கள் 15- 30 நாள்களிலேயே பதிவு செய்கின்றனர். இதனால்அதிக விலை கொடுத்து பதிவுசெய்கின்றனர். இதே 30 - 40 நாட்களுக்கு முன் பதிவு செய்வதன் மூலம் பலனை அடையலாம் என்றுகூறியுள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications