காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மார்ச் 2020-க்குள் 22 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள்..!

டெல்லி: 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி இன்று (ஏப்ரல் 02, 2019) வெளியிட்டிருக்கிறது.

வழக்கம் போல டெல்லியில் 24 அக்பர் ரோடில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையகத்திலேயே வைத்து 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறி அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது காங்கிரஸ்.

தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளை வெளியிடும் போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியோடு, முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் என பல தலைவர்களும் உடன் இருந்தார்கள்.

இதற்கு முக்கியத்துவம்

இதற்கு முக்கியத்துவம்

இந்தத் தேர்தல் வாக்குறுதிகளில் கிராமப்புறங்களில் இருக்கும் பொருளாதார பிரச்சனைகள், பொருளாதார அழுத்தங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், வேலை வாய்ப்பு உருவாக்கம் போன்ற பிரச்னைகளுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதன் அடிப்படையில் தான் தேர்தல் வாக்குறுதிகளையே தயாரித்திருக்கிறார்களாம். இந்தத் தேர்தல் வாக்குறுதிகளில் கிராமப்புறங்களில் இருக்கும் பொருளாதார பிரச்சனைகள், பொருளாதார அழுத்தங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், வேலை வாய்ப்பு உருவாக்கம் போன்ற பிரச்னைகளுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதன் அடிப்படையில் தான் தேர்தல் வாக்குறுதிகளையே தயாரித்திருக்கிறார்களாம்.

விவசாய பட்ஜெட்

விவசாய பட்ஜெட்

மிக முக்கியமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடுவார்களாம். இந்த 55 பக்க தேர்தல் வாக்குறுதிகளை ஆறு பெரும் பிரிவுகளாக பிரித்து இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு, பொருளாதாரம், உள்துறை பாதுகாப்பு, நல்ல நிர்வாகம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு செய்யவேண்டிய வேலைகள் மற்றும் அனைவருக்கும் ஒரு கெளவுரவமான வாழ்க்கை என பிரித்திருக்கிறார்களாம்.

மக்களின் மன் கி பாத்

மக்களின் மன் கி பாத்

இந்தத் தேர்தல் வாக்குறுதி மக்களின் மனதில் இருக்கும் பிரச்சனைகளை பேசும் தேர்தல் வாக்குறுதி எனச் சொல்லி இருக்கிறார் ராகுல் காந்தி. இது மக்களின் மன் கி பாத் எனவும் பேசி இருக்கிறார். ஒரு வருடத்துக்கு முன் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை தயார் செய்யத் தொடங்கிய போதே இதை ஒரு அறையில் வைத்து தயாரிக்கப்பட வேண்டிய அறிக்கை அல்ல, மக்களின் கருத்துக்கள் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் எனச் சொன்னார். குறிப்பாக எந்த ஒரு பொய்யும் இருக்கக் கூடாது எனவும் சொன்னாராம்.

முக்கிய விஷயங்கள்

முக்கிய விஷயங்கள்

வரும் 30 மார்ச் 2020க்குள் 22 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவது, புதிதாக பிசினஸ் தொடங்குபவர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த ஒரு உரிமம் வாங்க தேவையில்லாமல் நிம்மதியாக வியாபாரம் பார்ப்பது, முன்பே அறிவித்த குறைந்தபட்ச ஊதிய திட்டமான நியாயை நடைமுறைப்படுத்துவது போன்றவைகளோடு இப்போது கடைசியாக இந்தியா முழுமைக்கும் உள்ள விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வது என காங்கிரஸ் கட்சி தன் தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளில் தெரிவித்திருக்கிறது.

அக்டோபரில் இருந்தே

அக்டோபரில் இருந்தே

கடந்த அக்டோபரில் 2018 ல் இருந்து பல்வேறு மக்களிடம் பேசி அவர்கள் பிரச்சினையை புரிந்து கொண்டே இந்த தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்திருக்கிறார்களாம். காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை பல்வேறு பிரச்சனைகளை ஆழ்ந்து சிந்தித்து, நாடு முழுவதும் மக்களோடு பேசி, நிபுணர்களோடு விவாதித்து தான் வாக்குறுதிகளாக கொடுத்திருக்கிறார்களாம்.

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்

2019 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை இந்தியாவில் பலரும் விவாதிப்பார்கள். இதனால் இந்திய மக்களின் ஆசை மற்றும் காங்கிரஸ் கட்சியின் இலக்கு பெரிய அளவில் பேசப்படும் விவாதிக்கப்படும் என்றார் மன்மோகன் சிங்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+