ஜெட் ஏர்வேஸுக்கு ரூ. 1500 கோடி.. கைக்கு எட்டிய கனி வாய்க்கு கிடைக்கவில்லையே.. ஊழியர்கள் கவலை

டெல்லி: ஜெட் ஏர்வேஸுக்கு இப்போது போதா காலம் போல, ஏற்கனவே ஊழியர்களுக்கு சம்பள பாக்கியால் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் தற்போது வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையையும் கட்ட முடியாமல் தவிக்கிறது.

கடந்த2014-ம் ஆண்டு ஹெச் எஸ்.பி,சியில் வாங்கியிருந்த கடன் தொகை செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. குறிப்பாக கடந்த மார்ச்- 28ம் தேதி செலுத்த வேண்டிய கடன் 140 மில்லியன் டாலர்களை செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆம் ஆண்டு நிறுவனத்திற்கு மூலதனமாக இந்த கடன் வாங்கப்பட்டது. கடந்த மாதம் கட்ட வேண்டிய கடன் தொகை கட்ட தவறியதால் தற்போது இந்த நிறுவன ஹெச்.எஸ்.பி.சியுடன்பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.

ஜெட் ஏர்வேஸுக்கு ரூ. 1500 கோடி.. கைக்கு எட்டிய கனி வாய்க்கு கிடைக்கவில்லையே.. ஊழியர்கள் கவலை

ஏற்கனவே பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் மிக அமைதியான முறையில் இந்த பிரச்சனையை முடிக்க நினைப்பதாகவும் தெரிகிறது. இதனால் கடன் கட்டப்பட்டதா? இல்லையா? என்பது குறித்த தகவலும்இதுவரை வெளியிடப்படவில்லை.

கிரெடிட் ஸ்கோர் குறைஞ்சிடுமே

இதோடு மட்டும் அல்ல. கடந்த மார்ச் 11-ம் தேதி கட்ட வேண்டிய 32 மில்லியன் டாலர்களையும் கட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கிரெடிட் ஸ்கோரை மிக பாதிக்கும் என்றும், இதனால் வருங்காலத்தில் வங்கிகளில் கடன் வாங்குவது என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாகவே உள்ளது.

ரூ.1500 கோடி வந்திரும்

ஜெட் ஏர்வேஸுக்கு ரூ. 1500 கோடி.. கைக்கு எட்டிய கனி வாய்க்கு கிடைக்கவில்லையே.. ஊழியர்கள் கவலை

இப்பிரச்சனையைதீர்க்க வங்கிகளை அணுக, வங்கிகள் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகினால் மட்டுமே கடன் அளிக்கும் என்ற நிலையில், நரேஷ் கோயல் பதவியை விட்டு விலகினார். இந்த நிலையில் வங்கிகளும்அவசார கால நெருக்கடிக்கு ரூ. 1,500 கோடி அதாவது 217 மில்லியன் டாலர்களை கடனாக தர ஒப்புக்கொண்டது.

உழியர்கள் பிரச்சனை?

ஜெட் ஏர்வேஸுக்கு ரூ. 1500 கோடி.. கைக்கு எட்டிய கனி வாய்க்கு கிடைக்கவில்லையே.. ஊழியர்கள் கவலை

இந்த நிலையில் வாங்கிய ரூ.1500 கோடியில் தங்களது சம்பள பாக்கி கைக்கு கிடைத்து விடும் என்று நினைத்திருந்த ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தொகையை மட்டுமே தர முடியும் என்றும், மீதி பின்னர் அழிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஏனெனில் வங்கிகளின் கடன் பாக்கியை கட்டினால் ஊழியர் சமபளம் பாக்கியும் முழுதாக தர முடியாது என்பதால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இப்படியொரு முடிவை எடுத்ததாக தெரிகிறது. கைக்கு எட்டிய கனி வாய்க்கு கிடைக்கவில்லையே என ஊழியர்கள் மத்தியில் நினைத்தாலும் கிடைத்தவரை லாபம் என்று சந்தோஷத்தில் உள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+