கை நிறைய ஆர்டர்..! கலக்கும் L and T நிறுவனம்..!

மும்பை: இந்திய கட்டுமான துறைகளில் பெரிய ஜாம்பவானாக இருக்கும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் மின்சார பகிர்மான நிலையங்கள் மற்றும் மின் துணை நிலையங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு கட்டிக் கொடுக்க நிறைய ஒப்பந்தங்கள் கிடைத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறது.

கடந்த வியாழக்கிழமை மார்ச் 28, 2019 அன்று பங்குச் சந்தை நெறிமுறையாளர்களிடம் சமர்பித்த விவரங்களிலும் மேலே சொன்ன ஒப்பந்தங்களை உறுதி செய்திருக்கிறது லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம்.

ஆனால் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் கொடுத்த விவரங்களில், எவ்வளவு ரூபாய்க்கு இந்த ஒப்பந்தங்கள் கிடைத்திருக்கிறது என்கிற விவரங்களை வெளியிடவில்லை. ஆனால் எல்லாமே பெரிய பெரிய ஒப்பந்தங்கள் என்பதால் ஒரு ஒப்பந்தத்தின் விலை சுமாராக 2,500 கோடி ரூபாயில் இருந்து 5,000 கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனச் சொல்கிறார்கள்.

வெளிநாடுகளில் எல்லாம்

வெளிநாடுகளில் எல்லாம்

இந்த மின் பகிர்மானத் திட்டங்கள் மற்றும் மின் துணை நிலையத் திட்டங்கள், இந்தியாவில் மட்டும் இன்றி மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலும், தெற்காசிய நாடுகளிலும் அமைக்க பல்வேறு ஒப்பந்தங்கள் கிடைத்திருக்கிறதாம். ஆகவே அந்நிய செலாவணியிலும் கொஞ்சம் நல்ல லாபம் பார்க்கலாம் எனச் முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் லார்சன் அண்ட் டியூப்ரோவில் முதலீடு செய்து வருகிறார்கள்..

கேபில் திட்டம்

கேபில் திட்டம்

இந்தியாவில், சில தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் மின்சார கேபில்களை நிலத்துக்கு அடியில் பதிக்கவும் சில ஒப்பந்தங்கள் கிடைத்திருக்கிறதாம். இப்படி நிலத்தில் மின்சார கேபில்களை பதிப்பதல் மின்சாரம் தடையின்றி வருவதும், மின்சார பகிர்மானங்கள் போது மின்சார வேஸ்டேஜ்களும் கணிசமாக குறையுமாம்.

சோலார் நீர்பாசன திட்டங்கள்

சோலார் நீர்பாசன திட்டங்கள்

அதோடு சில சோலார் நீர்பாசன திட்டங்களையும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் கடந்த நிதி ஆண்டிலேயே பெற்றிருக்கிறதாம். இந்த சோலார் நீர்பாசன திட்டங்கள் மூலம் சூரிய ஒளியைப் பயன்படுத்தியே பயிர்களுக்கு தேவையான நீரைப் பாய்ச்ச இருக்கிறதாம்.

ரெசிஸ்டென்ஸ்

ரெசிஸ்டென்ஸ்

இந்த செய்தி வெளியானதில் இருந்து லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்தின் பங்குகளின் விலை 1365 ரூபாயில் இருந்து தற்போது 1417 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவன பங்குகளின் 52 வார அதிகம் விலை 1459.70 ரூபாய் தான். ஆக இந்த 1459 என்கிற புள்ளி லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவன பங்குகளுக்கு வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.

விலை ஏறும்

விலை ஏறும்

ஆக இந்த முறை இந்த நல்ல செய்திக்கான மொமெண்டம் நிறைவாக இருக்கும் பட்சத்தில், லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனப் பங்குகளின் விலை அதன் 52 வார அதிக விலையை (ரெசிஸ்டென்ஸ் விலையை) உடைத்துக் கொண்டு நல்ல விலை ஏற்றத்தில் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+