உற்பத்தி பாதிப்பு.. கச்சா எண்ணெய் விலைஅதிகரிப்பு.. சீனப் பொருளாதாரமும் ஒரு காரணம்!

டோக்கியோ: கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் சீனாவிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையும், ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளின் மீதான தடைகளுமே காரணமாகஉள்ளன.

கச்சாஎண்ணெய் பயன்படுத்துவோரில் உலகில் இரண்டாவது இடத்தில்உள்ள சீனாவில் பொருளாதாரம் அதிகரித்து வருவதும் இதன் ஒரு காரணமாகும். மேலும் சீனாவின்உற்பத்தி குறித்த பி.எம்.ஐ டேட்டாசீனா எதிர்பாராத அளவில் வளர்ந்து வருவதாகவும், அதுவும் கடந்த 4 மாதங்களில் எதிர்பாராதஅளவில் இருப்பதாலும், சீனா பொருளாதாரம் எந்தஅளவு வளர்ச்சியடைகிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

அமெரிக்காவில்நிலவி வரும் பொருளாதார பிரச்சனை காரணமாககச்சா எண்ணெய் விலையில் இதுவரை பெரிய மாற்றம்இல்லாமல் இருந்தாலும், தற்போது பொருளாதாரத்தை அதிகரிக்க பல வகையிலும் முயற்சிகொண்டுள்ளது, இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம்பெரிய அளவில் மாற்றம் இல்லைஎன்றாலும் இது கச்சா எண்ணெய்விலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாதுஎன்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

சீனாவில் பொருளாதாரம் முன்னேற்றம்!

சீனாவில் பொருளாதாரம் முன்னேற்றம்!

கடந்த2012- ம் ஆண்டிலிருந்து சீனாவின் பொருளாதாரம் வளர்ந்து வருவதுமேலும் கச்சா எண்ணெய் தேவையைஅதிகரிக்கும், அதோடு கடந்த மார்ச்மாதத்தில் வெளியான பர்சேஸ் மேனுபேக்சரிங் இன்டெக்ஸ் (PMI) கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவு விரிவடைந்துள்ளது. இதனால் சீன பொருளாதாரம் மேலும்அதிகரிக்கும் , இதனால்மற்ற துறைகளில் முதலீடு செய்யும் என்றும், இதனால்கச்சா எண்ணெய் தேவை மேலும் அதிகரிக்கும்என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் ஆயில்விலையை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, எண்ணெய் நிறுவனங்களுக்கு தடை

அமெரிக்கா, எண்ணெய் நிறுவனங்களுக்கு தடை

அதே சமயம் அமெரிக்காவும் நிர்ணயம்செய்த பொருளாதார இலக்கை அடைய முடியாததால், ஈரான் மீதான பொருளாதார தடையைமேலும் அதிகரிக்க போவதாகவும், மேலும் அடுத்த மாதம்காலாவதியாக இருக்கும் 8 எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு பொருளாதார தடைகளிலிருந்து தடை விதிக்க கூடாதுஎன்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உற்பத்தியும் இல்லை

உற்பத்தியும் இல்லை

வெனிசுலாவில் நீடித்த மின்சாரம் இல்லாமையால் கச்சாஎண்ணெய் உற்பத்தி மிகபாதிப்படைந்துள்ளது. மேலும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபக், குழாய் வழியாகசெல்லும் விநியோகத்தை குறைத்துள்ளது. இது நான்கு வருடத்தில்இல்லாத அளவுக்கு விலை ஏற்றத்தைஅதிகரித்துள்ளது. உலக நாடுகளில் எண்ணெய் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் நாடான சவுதி அரேபியாவில்வெனிசுலாவின் உற்பத்தி பாதிப்பு, ஓபக் நாடுகளின் உற்பத்திகுறைப்பு போன்றவற்றால் விலையேற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது.

மூலப்பொருட்களின் விலை அதிகரிக்கும்

மூலப்பொருட்களின் விலை அதிகரிக்கும்

வரும்வாரங்களில் இது போன்ற பலகாரணங்களால் கச்சா எண்ணெய் விலைஅதிகரிக்கவே வாய்ப்புள்ளது. இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் மூலப்பொருட்களின் விலையும்அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பெட்ரோல் டீசல்விலையும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணமேயில்லாமல்,விலை ஏறும் பெட்ரோல் டீசல்விலை, இப்போது சொல்லவா வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+