டெல்லி : இந்தியாவின் இறால் ஏற்றுமதி 10 மாதங்களில் 20.63 சதவீதம் அதிகரித்து 394 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 27 ஆயிரம் கோடி.
இந்திய கடல் உணவு ஏற்றுமதியில் இறால் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில், அளவு மற்றும் வருவாயில் இறால் முறையே 42.05 சதவீதம் மற்றும் 69.95 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது. இதே காலத்தில் இறால் ஏற்றுமதி 4.56 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது 2017-18 ஆண்டு ஏப்ரல்-ஜனவரி வரை 3.78 லட்சம் டன்னாக இருந்த்து.

உலக அளவில் முன்னணியில் உள்ள ஈக்வெடார் மற்றும் இந்தோனேஷியா ஆகியவை 14 சதவீத வளர்ச்சியினை எட்டியிருக்க இந்தியா அதிக ஏற்றுமதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. சீனாவிற்கான2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை முடிந்த ஆறு மாத காலத்தில் 18 சதவீத வளர்ச்சியுடன் சுமார் 14 ஆயிரம் டன்னாக உள்ளது.
ஆனால் வியட்நாம் மற்றும் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி சற்று குறைந்துள்ளது.
இறால் வகைகள்:
இந்தியாவில் இருந்து கறுப்பு புலி, வனாமி , பதப்படுத்தப்பட்ட கடல் புலி இறால் வகைகள் அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன. இந்திய கடல் உணவுகளின் தனி சுவை காரணமாக வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உள்ளது.

இறால் உற்பத்தியில் ஆந்திரா, தமிழ் நாடு, கேரளா, மஹாராக்ஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.மேலும் மீன் வளங்களை அதிகரிப்பதற்கான இடங்களை ஆந்திரா, குஜராத், மேற்கு வங்கம்,ஆகிய மாநிலங்களில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
விதிமுறை:
ஐரோப்பிய நாடுகள் பதப்படுத்தப்பட்ட இறால்களில் நச்சு அளவீடு தொடர்பாக விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. இருந்த போதிலும் இந்திய இறால்களின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications