மந்தமாகும் கார் விற்பனை காரணங்கள் என்ன..?

பொதுவாகவே ஒரு நாட்டு பொருளாதாரத்தின் கண்ணாடித் துறை என்றால் அது ஆட்டோமொபைல் துறை தான். அது இந்திய தொழில்துறைக்கும் பெரிய அளவில் பொருந்தி வருகிறது. எப்போது எல்லாம் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை வளர்கிறதோ அப்போது எல்லாம் இந்தியப் பொருளாதாரம் வளர்வதை நேரடியாக பார்க்க முடிந்திருக்கிறது.

ஆக ஆட்டோமொபைல் என்கிற ஒரு துறையில் ஏற்படும் தேக்கம் இந்திய நாட்டின் ஒட்டு மொத்த ஜிடிபி-யையே பாதிக்கும். கடந்த டிசம்பர் 2018-ல் இந்திய ஆட்டோமொபைல் அப்படி ஒரு மோசமான நிலையில் இருப்பதைத் தான் காட்டுகிறது ஆட்டோமொபைல் விற்பனை. அதன் பிறகு கொஞ்சமாக ஜனவரி 2019-ல் வாகன விற்பனை நிமிர்தது போலத் தெரிந்தது, ஆனால் மீண்டும் பிப்ரவரியில் படுத்துவிட்டது. இப்படி அக்டோபர் 2018-ல் இருந்தே கார் விற்பனை வெகுவாக தள்ளாட்டத்தில் தான் இருக்கிறது.

மந்தமாகும் கார் விற்பனை காரணங்கள் என்ன..?

இந்தியாவில் மற்ற ரக கார்களை ஒப்பிடும்போது என்ட்ரி லெவல் கார்களின் விற்பனை எப்போதுமே ஒரு நிலையாக இருக்கும். மொத்த கார் விற்பனையில் துண்டாக எண்ட்ரி லெவல் கார்களின் விற்பனை விண்ணைத் தொடும்.

ஆனால், கடந்த அக்டோபரில் இருந்தே எண்ட்ரி லெவல் கார்களின் விற்பனை சூழல் பெரிய அளவில் மாறியுள்ளன. கடந்த அக்டோபர் முதல், கார்கள் விற்பனையில் அதிகம் பாதிப்படைந்தது சிறிய கார்கள்தான்.

சிறிய கார்களின் விற்பனை குறைந்துகொண்டிருக்க, இந்தத் தேக்கநிலையிலும் வளர்ச்சியைக் கண்டிருக்கும் கார்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. டொயோட்டாவின் இனோவா, மஹிந்திராவின் எக்ஸ்யூவி 500, காஸ்ட்லியான ஜீப் காம்பஸ் போன்ற மிட் சைஸ் எஸ்யூவி ரக கார்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது.

அக்டோபரில் 2.87 லட்சம், நவம்பரில் 2.17 லட்சம், டிசம்பரில் 2.02 லட்சம், ஜனவரியில் 3.01 லட்சம், பிப்ரவரியில் 2.15 லட்சம் என கூடியும் குறைந்தும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது இந்திய கார் சந்தை. சராசரியாக கடந்த ஆறு மாதங்களில் சுமார் 8.5% விற்பனை சரிந்துள்ளதாகச் சொல்கிறது ஆட்டோமொபைல் டீலர்கள் சம்மேளன அறிக்கைகள்.

என்ன காரணங்கள் எனப் பார்த்தால் எரிபொருள் விலை ஏற்றம், பாரத் ஸ்டேஜ் 6 மாற்றம், வட்டி விகித உயர்வு, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மீதே மக்களுக்கு இருக்கும் சந்தேகம், கார் நிறுவனங்களின் கைகளைக் கடிப்பதால் அதிக தள்ளுபடி விலைக்கு வராத கார்கள், சமீபத்தில் அதிகரித்த இன்ஷூரன்ஸ் விலை என ஒரு பெரிய பட்டியலை நம் முன் வீசுகிறார்கள் கார் உற்பத்தியாளர்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பழைய கார்களை மாற்றி புதிய கார்களை வாங்கும் பணக்காரர்களுக்கு மட்டும் பணத் தட்டுப்பாடு இல்லை என்பதை இங்கே உணர முடிகிறது. அதற்கு மேலே சொன்ன இனோவா, ஜீப் காம்பஸ், எக்ஸ்யூவி 500 போன்ற வாகனங்கள் விற்பனை வளர்ச்சியெ சொல்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+