2019-ல் இந்தியாவில் வழக்கமாக பெய்யும் மழையில் 70% தான் பெய்யும்...! Skymet கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் (Skymet) நிறுவனம் இந்த 2019-ம் ஆண்டுக்கான மழைப் பொழிவு கணிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

 

இந்த கணிப்பில் இந்த வருடம் இந்தியாவில் மழைப் பொழிவு வழக்கத்தை விட குறைவாக இருக்கும் என கணித்திருக்கிறது.

பசிபிப் பெருங்கடல் வழக்கத்தை விட கூடுதல் வெப்பமாக இருப்பது போன்றவைகள் எல்லாம் இந்தியாவில் மழை பொழிவு குறைய காரணம் எனக் கணித்திருக்கிறது ஸ்கைமெட். அதாவது இந்த 2019-ம் ஆண்டிலும் எல் நினோ மேலும் வலு பெறும் ஆண்டாக இருக்குமாம்.

ஸ்விக்கி டெலிவரி பாய் கொடுத்த பாலியல் தொந்தரவு - 200 ரூபாய் கூப்பன் கொடுத்தால் போதுமா

70% தான்

70% தான்

இந்தியாவுக்கு வழக்கமாக கிடைக்கும் மழைப் பொழிவில் வெறும் 70 சதவிகிதம் வரை மட்டுமே பெய்யும் எனவும் கணித்திருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவில் 2019-ம் ஆண்டில் மழைப் பொழிவு வழக்கம் போல இருக்கும் என கணித்தது குறிப்பிடத்தக்கது.

அரசு கணிப்பு

அரசு கணிப்பு

ஆனால் ஸ்கைமெட்டின் கணிப்புக்கு எதிராக இந்திய வானிலை ஆய்வு மையம் தன் கணிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்திய அரசின் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் படி "இந்த 2019-ல் இந்தியாவில் மழை நன்றாக பெய்யும், வழக்கத்தை விட நல்ல மழை இருக்கும், எல் நினோ பாதிப்புகள் இருக்காது" எனக் கணித்திருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

பெரிய விவசாயிகள்
 

பெரிய விவசாயிகள்

உலகிலேயே மிகப் பெரிய எண்ணிக்கையில் விவசாயத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் இந்தியர்கள் தான். சுமார் 50 கோடி பேர் இன்னும் தங்களிடம் இருக்கும் விவசாய நிலத்தையும், விவசாய நிலம் இருப்பவர்களிடத்தில் விவசாயக் கூலிகளாகவுமே வேலை செய்து வாழ்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதோடு இப்போது உலகின் டாப் 10 பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று என்பதால் இந்த பருவமழைகள் இந்தியாவுக்கு அத்தனைஅவசியமாகிறது.

சரிந்த சந்தை

சரிந்த சந்தை

இப்போது இந்த மழைப் பொழிவு குறைவாகத் தான் இருக்கும் என்கிற செய்தியால் சென்செக்ஸ் தன் புதிய உச்ச குளோசிங்கான 39,056 புள்ளிகளில் இருந்து சரிந்து 38,877 புள்ளிகளுக்கு நிறைவடைந்தது கவனிக்கத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2019 indian monsoon rain will be 70 percent of its regular rain fall skymet

2019 indian monsoon rain will be 70 percent of its regular rain fall skymet
Story first published: Wednesday, April 3, 2019, 17:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X