தவித்த வாய்க்கு தண்ணீர்.. பி.எஸ்.என்.எல்லைக் காப்பாற்ற கை கொடுக்கும் தொலைத் தொடர்புத்துறை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் தவித்த அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில், ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து வருவது அனைவரும் அறிந்த விஷயமே.

இந்த இக்கட்டான சூழ்னிலையை எப்படியாவது வேண்டும் என்ற நிலையில், தற்போது சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. இதன் முதல் கட்டமாக தற்போது விமானங்களிலும் விமான நிலையங்களிலும் இண்டர் நெட் வசதி கொடுக்கும் செய்யும் உரிமத்தை தொலைத்தொடர்பு துறை பி.எஸ்.என்.எல்க்கு வழங்கியுள்ளது.

துவண்டு போன நிலையில் பி.எஸ்.என்.எல்க்கு கிடைத்த இந்த வாய்ப்பு, தவித்த வாய்க்கு தண்ணீர் ஊற்றுவது போலவகும். பி.எஸ்.என்.எல் மற்றும் அதன் துணை நிறுவனமான இன்மார்சாட் நிறுவனமும் இணைந்து இந்த பிற்பகுதியில் ஆரம்பிக்கும் என்றும் தெரிவித்துள்ளன. இதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் , நிலத்தடி இணைப்புகள், விமான நிலையங்க்களுக்கு தேவையான இணைப்புகள் மற்றும் விமானங்களில் தேவையான வசதிகள் செய்ய அவகாசம் வேண்டும் என்பதாலேயே இந்த கால அவகாசம் என்று பத்திரிக்கையில் அறிக்கை விடுத்துள்ளன இந்த நிறுவனங்கள்.

எங்களுக்கும் உரிமம் இருக்கு

எங்களுக்கும் உரிமம் இருக்கு

ஹியூக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் உலகளாவிய ஒரு நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். டாடனெட் சர்வீஸஸ் நிறுவனத்திற்கு ஏற்கனவே கடல் சார் மற்றும் விமானத் துறையில் (FMC) இந்த உரிமம் வழங்கப்பட்டுள்து. மேலும் பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கும் இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட், அமேசான், ஓயோ... லிங்கிடுஇன் வெளியிட்டுள்ள 25 பெஸ்ட் நிறுவனங்களின் பட்டியல் பிளிப்கார்ட், அமேசான், ஓயோ... லிங்கிடுஇன் வெளியிட்டுள்ள 25 பெஸ்ட் நிறுவனங்களின் பட்டியல்

அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள்

அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள்

இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் இந்திய தொலைத்தொடர்பு துறை வெளியுள்ள அறிக்கையில் இதற்கான கட்டுப்பாடுகளையும் அறிவித்திருந்தது. இந்தியாவிற்குள் பறக்கும் விமானங்களில் வாய்ஸ் மற்றும் இணைய தள சேவையை அளிக்க இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களோ அல்லது உரிமம் பெற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களோ இந்த இண்டர்னெட் சேவையை அளிக்க அனுமதிக்கப்படும்.

ஸ்பைஷ் ஜெட் அறிமுகம்
 

ஸ்பைஷ் ஜெட் அறிமுகம்

இதுவரை விமானங்களில் இண்டர்னெட் சேவை இல்லாத நிலையில், ஸ்பைஷ் ஜெட் நிறுவனம் முதன் முறையாக அதன் பயணிகளுக்கு இந்த சேவை விரைவில் அறிவிக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்தது. மேலும் விஸ்டாரா இந்த சேவையில் ஈடுபட போவதாகவும் கூறியுள்ளது.

புத்துயிர் பெறும் நிறுவனங்கள்

புத்துயிர் பெறும் நிறுவனங்கள்

வாய்ஸ் கால் சேவையோ அல்லது இணையதள சேவையோ விமானங்கள் இந்திய வான்வெளிக்கு உட்பட பகுதிக்குள் குறைந்த பட்ச உயரம் 3000மீ என கூறியுள்ளது. இது விமான பயனிகளுக்கு பயனுள்ள சேவையே என்றாலும், பி.எஸ்.என்.எல் போன்ற முடங்கி போயுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் புத்துயிர் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

பி.எஸ்.என்.எல்க்கு  பொன்னான காலம்

பி.எஸ்.என்.எல்க்கு பொன்னான காலம்

அதிலும் குறிப்பாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடந்த சில வருடங்களாக நஷ்டத்தில் போயிக் கொண்டிருந்தாலும், சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த நிதியாண்டில் சமார் 8000 கோடி ரூபாயாயும் நஷ்டம் அடைந்துள்ளது. இதுவே நடப்பு நிதியாண்டில் 2019 இந்த நஷ்டம் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறியிருந்தது. இதனால் பி.எஸ்.என்.எல் 54,000 பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தேர்தல் முடிந்து ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. ஆக இது பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு இது பொன்னான காலமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL get wifi licence for flights

State – owned telecom service provider BSNL has received licence from the department of telecommunications to provide internet and mobile sevices on flights. BSNL and its satellite partner, Inmarsat, will be able to offer in – flight connectivity to airlines” later this year, once the ground work and associated approvals are in place.
Story first published: Thursday, April 4, 2019, 13:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X