கடந்த 2016 - 17 நிதி ஆண்டுக்கு (2017 - 18 Assessment Year) வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். 2016 - 17 நிதி ஆண்டில் (2017 - 18 Assessment Year)-ல் மட்டும் புதிதாக 1.06 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்களாம்.
Assessment Year என்பது ஒரு financial year (நிதி ஆண்டுக்கு) அடுத்து வரும் ஆண்டு. உதாரணமாக 2018 - 19 நிதி ஆண்டில் சம்பாதித்த பணத்துக்கு, 2019 - 20-ல் தான் வருமான வரி தாக்கல் செய்ய முடியும். இப்போது இதில் 2018 - 19 Financial year, 2019 - 20 Assessment Year.
சரி அப்படி என்றால் பணமதிப்பிழப்பினால் வரி செலுத்துபவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை திகரித்திருக்கிறதா..? எனக் கேட்டால் ஆம்... இல்லை... என இரண்டு பதிலுமே சொல்ல வேண்டி இருக்கிறது.
ஆனால் வருமான வரி செலுத்தியவர்கள்
அரசு சொல்வது போல 2016 - 17-ல் புதிதாக வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் அதே நேரத்தில், இன்னொரு ஆச்சர்யமான விஷயத்தையும் பார்க்க வேண்டி இருக்கிறது. அதே 2016 - 17-ல் தான் ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்தவர்களில் 88.04 லட்சம் பேர் 2016 - 17 நிதி ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை.
சுருக்கமான கணக்கு
இப்படி ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்தவர்கள், அடுத்து வரும் ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்யாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 2015 - 16-ல் ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்தவர்களில் 8.56 லட்சம் பேர் மட்டுமே 2015 - 16-ல் வருமான வரி தாக்கல் செய்யவில்லை. ஆனால் 2016 - 17-ம் ஆண்டில் ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்தவர்களில் 88.04 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்யவில்லையாம்.
சரிவு வரவு
கடந்த 2000 - 01-ம் ஆண்டில் இருந்து 2015 - 16-ம் ஆண்டு வரை ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்தவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்யாமல் இருக்கும் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்ததிருக்கிறது. 2012 - 13-ல் 37.54 லட்சம் பேர், 2013 - 14-ல் 27.08 லட்சம் பேர், 2014 - 15-ல் 16.32 லட்சம் பேர், 2015 - 16-ல் 8.56 லட்சம் பேர் என குறைந்து கொண்டே வந்திருக்கிறது. நல்ல சமிஞைகள் தான். ஒவ்வொரு ஆண்டும் ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்தவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்து வருகிறார்கள்.
பலமான அடி
திடீரென ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்து விட்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்யாதவர்களின் எண்ணிக்கை 8.56 லட்சம் பேரில் இருந்து 88.04 லட்சம் பேராக அதிகரிக்க, பணமதிப்பிழப்பை ஒரு காரணமாக பார்க்கிறார்களாம். காரணம் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட வேலை இழப்பைச் சொல்கிறார்கள்.
அதிகரிக்கும் புதிய வரி தாரர்கள்
இதே காலகட்டங்களில் புதிதாக வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் வந்திருக்கிறது. 2012 - 13-ல் 52.39 லட்சம் பேர், 2013 - 14-ல் 55.25 லட்சம் பேர், 2014 - 15-ல் 66.27 லட்சம் பேர், 2015 - 16-ல் 85.75 லட்சம் பேர் என அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. ஆக ஒரு பக்கம் எந்த அளவுக்கு பணமதிப்பிழப்பு வருமான வரித் துறையினருக்கு நன்மை கொடுத்ததோ அதே அளவுக்கு தீமையும் செய்திருக்கிறது.
1 கோடி பேர் உள்ளே 88 லட்சம் பேர் வெளியே
சுருக்கமாக பணமதிப்பிழப்பினால் 2016- 17-ல் 1 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள். ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்தவர்களில் 88 லட்சம் பேர் 2016- 17-ல் வருமான வரி தாக்கல் செய்யவில்லை.


Click it and Unblock the Notifications