இந்தியா ஒரு டாரிஃப் கிங்.. பொருளாதார வளர்ச்சியைப் பார்த்துப் பொறுமும் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: உலகில் அதிகளவில் வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக அளவில் வரி விதிப்பதாகவும் அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் உள்ளடக்கிய பல அமெரிக்க பொருட்களுக்கு இந்திய அதிக அளவில் வரி விதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த உயர்ந்த கட்டணமானது நியாயமானதே அல்ல என்று கடந்த செவ்வாய் கிழமையன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் விருந்தளிப்பில் கலந்து கொண்டபோது கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் முன்னர் வெள்ளை மாளிகையில் இந்த பரஸ்பரவரிக்கு இந்திய அதன் ஆதாரவை தெரிவிக்க, ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு ஆதரவு தெரிவித்து 100% லிருந்து 50% மாக குறைந்தது. இதன் மூலம் வரி குறைந்தது என்றும் இது பரவாயில்லை என்றும், ஆனால் இது பத்தாது என்றும் கூறியுள்ளார்.

 இந்தியா “டாரிஃப் கிங்”

இந்தியா “டாரிஃப் கிங்”

அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்படி கூறுவது முதல் முறையே அல்ல. பல முறை இதே போல கூறியுள்ளதும் இந்தியாவை "டாரிஃப் கிங்" என்றும் இது அமெரிக்க தயாரிப்புகளின் மீது தொடர்ந்து அதிக வரி விதித்து வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அழைப்பை பெற்றேன். அவர்கள் அதாவது இந்திய மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று என்றும் அவர்கள் எங்களுக்கு 100% வரியை விதித்தனர் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

 இந்தியாவிற்கு வரி இல்லை

இந்தியாவிற்கு வரி இல்லை

இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு 100% சதவிகிதம் வரியை விதித்தாலும், இந்தியா அமெரிக்காவிற்கு இறக்குமதி பொருட்களுக்கு நாங்கள் பெரிதாக வரி விதிப்பதில்லை, இது இந்தியாவோடு ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லை. மேலும் அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்திய தேசிய காங்கிரஸ் விருந்தளிப்பில் கலந்து கொண்ட போது , டிரம்ப் பல நாடுகளின் சிக்கல் மற்றும் வணிக சிக்கல் பற்றி பேசியதாகவும் அதை எப்படி வெற்றிகரமாக சரி செய்வது என்பது பற்றியும் கூறியுள்ளார்.

 சீனா – அமெரிக்கா பேச்சுவார்த்தை

சீனா – அமெரிக்கா பேச்சுவார்த்தை

மேலும் இது குறித்து பேசுகையில், சீனாவுடனான பேச்சுவார்த்தை மிக நன்றாகவே நடக்கிறது என்றும் கூறினார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யபடும் எஃகு மற்றும் அலுமினியம் மீது அதிகப்படியான வரியை செலுத்தியதால் உலக வர்த்தக யுத்தத்தில் அச்சத்தை தூண்டிவிட்ட பொருளாதார யுத்தமாக இருந்தது. டிரம்ப் சீன பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வரியை 25% அதிகரித்து 250 பில்லியன் டாலர் வரை உயர்த்தினார். இதையடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடான சீனா அமெரிக்கா பொருட்களுக்கு 110 பில்லியன் டாலரை விதித்தது.

 அமெரிக்கா - சீனா ஒப்பந்தம்

அமெரிக்கா - சீனா ஒப்பந்தம்

அமெரிக்கா மற்றும் சீனாவின் வர்த்தக துறை சார்ந்த முக்கிய நபர்கள் இருவர் இது குறித்த சுமூகமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றர். மேலும் இது குறித்து நாங்கள் நன்றாக செய்கிறோம் என்று நினைக்கிறேன். சீனா அதிகளவு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது. 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள தொழில் நுட்ப விஷயங்களில் 25% வரி செலுத்தி வருகின்றனர். மேலும் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை தொடர ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்கும் 25% வரி செலுத்த போகிறார்கள். என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

 தொழிலாளர்களை பாதுகாக்கும் விதிகள்

தொழிலாளர்களை பாதுகாக்கும் விதிகள்

அமெரிக்க நிர்வாகம், வர்த்தகம் தொடர்பான விதிகளில் தொழிலாளர்களுக்கு எந்தவொரு இடையூரும் ஏற்படாமல் அவர்களை பாதுக்காக்க தகுந்த வாறே விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா சீனாவுடனான நீண்ட கால வர்த்தகத்தில் ஈடுபடு போவதாகவும், இந்த விஷயத்தில் ஏதும் தவறு நேராது என்றும், அறிவார்ந்த சேவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+