மும்பை: வங்கி சாரா நிதி நிறுவனமான எல் & டி பைனான்ஸ் நிறுவனம் கடன் பத்திரங்களைப் வெளியீடு மூலம் ரூ.1000 கோடி நிதி திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது.
கடன் பத்திரங்கள் வெளியிட்டு அதன் மூலம் ரூ.1000 கோடி திரட்ட உள்ளதாகவும், இது முறையே 3, 5 மற்றும் 8 வருடங்களில் முதிர்வடையும் எனவும், இதற்கான வட்டி விகிதம் 8.48 - 9.05 சதவிகிதமாக இருக்கும்.

இதன் மூலம் திரட்டப்படும் தொகையானது கடன் , நிதியளித்தல் மற்றும் மறுனிதியளித்தல் போன்ற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
ஏப்ரல் -8ம் தேதி தொடங்கவுள்ள இக்கடன் பத்திர வெளியீடு வரும் ஏப்ரல் 18-ம் தேதி முடியவுள்ளதாம். இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் எல்&டி பைனான்ஸ் இந்திய பங்கு சந்தைகளில் பட்டியிடப்படும் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
எடல் வைஸ், ஏகே கேப்பிட்டல், ஆக்ஸிஸ் கேப்பிட்டல் மற்றும் டிரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அட்வைஸர் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த கடன் பத்திரங்களை நிர்வகிக்க உள்ளன.
கடந்த மாதம் இந்த நிறுவனம் கடன் பத்திர வெளியீட்டில் ரூ.1500 கோடி திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், இதற்காக முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டியதை அடுத்து ரூ.2228.06 கோடியை திரட்டியது என்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.


Click it and Unblock the Notifications