அடடா.. பங்குகளை வெளியிட்ட முதல் நாளே 9% பங்குதாரர்கள் அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் மெட்ரோபொலிஸ்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவின்முன்னணி நோய் கண்டறியும் நிறுவனங்களில் ஒன்றாக மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர்நிறுவனம், பங்கு ஏப்ரல் 3ம் தேதி புதிய பங்கினை வெளியிட்டது.

 

பங்குக ளை வெளியிட்ட முதல் நாளே மாலை சுமார் 5 மணி வரையில் ரூ.1200 கோடி மதிப்புள்ள 9% பங்குதாரர்கள் பங்குகளை வாங்கியுள்ளனர் என்பதை நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூலம் அறிய முடிகிறது. இது மெட்ரோபொலிஸ் நிறுவனத்திற்கு மிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
அடடா..  பங்குகளை வெளியிட்ட முதல் நாளே 9% பங்குதாரர்கள் அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் மெட்ரோபொலிஸ்

ஏற்கனவே பங்கு வெளியிட்டுள்ள நிலையில் வரும் ஏப்ரல் 5ம் தேதியுடன் இந்த பங்கு வெளியிடு முடிவடைவதால் பங்குதாரர்கள் மிக ஆவலுடன் இதன் பங்குகளை வாங்கி வருவது இதன் மூலம் அறிய முடிகிறது.

Demonetization-ஆல் 88,00,000 பேர் வருமானவரி தாக்கல் செய்யவில்லை! 20 ஆண்டு வரலாற்று உச்சம்! Demonetization-ஆல் 88,00,000 பேர் வருமானவரி தாக்கல் செய்யவில்லை! 20 ஆண்டு வரலாற்று உச்சம்!

இதில் 1.37 கோடி பங்குகள் பொது பங்குகளாகவும், இதன் புரோமோட்டரான சுஷில் கனுபாய் ஷா வசம் 62.7 லட்சம் பங்குகளும், சி.ஏ லோட்டஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் வசம் 74.1 லட்சம் பங்குகளும் உள்ளன என்பது ஏற்கனவே நாம் அறிந்ததே. மேலும் இந்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு 3 லட்சம் பங்குகளும், இதில் முதலீடு செய்யும் பொது முதலீட்டுதாரர்களுக்கு பங்குகள் குறைந்த பட்சம் 17 பங்குகளும், 17 மடங்கிலும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

NSE மற்றும் BSEயில் பட்டியலிடப்படும்.

கிரெடிட் சூசி செக்யூரிட்டிஸ், கோல்டுமேன் சாச்ஸ், ஹெச்.டி.எப்.சி வங்கி, ஜே.எம் பைனான்ஷியல், மற்றும் கோடக் மகேந்திரா கேப்பிட்டல் கம்பெனி உள்ளிட்ட பல முன்னனி நிறுவனங்களின் மேலாளர்கள் , வரும் ஏப்ரல் 15ம் தேதியில் NSE மற்றும் BSEயில் பட்டியிடப்படுவதற்கான தற்காலிக தேதியாக அறிவித்துள்ளன.

மெட்ரோபொலிஷ் நிறுவனம் ஈக்விட்டி ஷேர்ஸ் மூலம் 60, 23,293 பங்குகளைக் ஒதுக்கீடு செய்து ரூ.530 கோடி நிதி திரட்டியுள்ளது. இது கடந்த செவ்வாயன்று 26 முதலீட்டாளர்கள் ரூ.886 என்ற விலைக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.

மெட்ரோபொலிஸ் விரிவாக்கம்

மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் நிறுவனம் இந்தியாவில், 19 மாநிலங்களிலும், 197 நகரங்களிலும் விரிவடைய உள்ளது. இது செபியின் ரெட் ஹெரிரிங் ப்ரொஸ்பெக்ட்ஸ் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு மற்றும் தெற்கு இந்தியாவில் 83 மருத்துவ ஆய்வகங்களில், இதன் மூலம் 1473 நோயாளிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இது போக 396 உதவி பரிந்துரை மையங்களுக்கும் மெட்ரொபொலிஸ் நிறுவனம் தலைமை வகிக்கிறது.

கிளினிக்கல் தொடர்பான அனைத்து சேவை

மெட்ரொபொலிஸ் கிளினிக்கல் தொடர்பான அனைத்து சேவையும், குறிப்பாக நோய் தாக்கத்தை பற்றி கண்டறிதல், உறுதிபடுத்துதல், அதை உறுதிபடுத்துதல் உள்ளிட்ட பல சேவைகளையும் செய்து வருகிறது.

கடந்த 2016ம் நிதியாண்டோடு ஒப்பிடும் போது , 2018- ம் நிதியாண்டில் மெட்ரொபொலிஸ் நிறுவனத்தின் வருவாய் 16.3 சதவிகிதம் அதிகரித்து, அதன் வருவாய் 643.6 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இதுவே இதன் நிகர லாபம் 15.7 சதவிகிதம் அதிகரித்து 109.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ipo
English summary

Metropolis healthcare IPO subscribes over 9% on day 1

The initial public offering (IPO) of diagnostic firm metropolis healthcare limited (MHL) was subscribed over 9% on the first day of the issue on first day share issue till yesterday evening. Metropolis healthcare’s IPO has been subscribed 9% according to data available with national stock exchange.
Story first published: Thursday, April 4, 2019, 16:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X