டெல்லி: இந்திய தொழிலக கூட்டமைப்பின் 2019 ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, புதிய தொழில் குறித்த புதிய தொழில் கொள்கையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
நாங்கள் ஒரு கொள்கையை உருவாக்கியுள்ளோம். இதை வரப் போகும் புதிய அரசு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்கப்படுகிறது. மேலும் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் நாங்க்கள் அனுப்பியுள்ள தொழிற்கொள்கையை இதுவரை இன்னும் பரிசீலிக்கபடவில்லை.

இது வளர்ந்துவரும் தொழிற்துறைகளை ஊக்குவிப்பதோடு, ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை நவீன மயமாக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொழிற்துறைகளில் உள்ள கட்டுப்பாடுகளையும் தடைகளையும் குறைப்பதற்காகவும், காகித வேலைப்பாடுகளைக் குறைப்பதும் வளர்ந்து வரும் துறைகளுக்கு தனது ஆதரவைத் தரும் எங்கிறார் சுரேஷ் பிரபு.
வர்த்தகதுறை அமைச்சகம் புதிய துறையில் புதிய தொழில்களுக்கு ஆதரவு அளிக்கவும் புதிய தொழில் கொள்கைகளில் வழி செய்யப்பட்டுள்ளது.
அன்னிய நேரடி முதலீட்டை பொருத்த அளவுக்கு அதை நாம் பெருமளவுக்கு பெற முயல வேண்டும். புதிய தொழில் திட்டங்க்களை தீட்டுவதன் மூலமாகவோ, தொழில்களை கையகப்படுத்துவதன் மூலமாகவே அதனை கொண்டு வர முயல வேண்டும். அதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும். எனவே இதற்கு இரண்டுக்கும் ஏற்ற அறிக்கைகளை தயார் செய்ய வேண்டும்.
ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், உள் நாட்டில் பல புதிய தொழில்களைக் ஊக்குவிக்கவும் அதற்காக வழிமூறைகளை எளிமையாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி பல ஸ்டார்டப் நிறுவனங்கள் வர்த்தக அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் கடந்த 2018 - 2019 ல் இந்திய ஏற்றுமதி 540 பில்லியன் டாலரை தொடும் என்றும், இதுவே கடந்த ஏபரல் முதல் பிப்ரவரிக்குள் 8.85 % ஏற்றுமதி செய்து 298.47 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. தற்போது பல ஆயிரம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வர்த்தக அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதோடு புதிதாக தொடங்க்கப்பட்ட புதிய நிறுவனங்களுக்கு உள்ள பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து அதன் பாதையில் உள்ள பிரச்சனைகளையும் அகற்ற வேண்டும் என்கிறார் பிரபு.


Click it and Unblock the Notifications