விவாகரத்தால் உலகின் 3-வது பணக்காரியாகும் மெகென்ஸி பிசாஸ்..! யார் இவர்..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்த பணக்காரியின் பெயர் மெகென்ஸி பிசாஸ் (MacKenzie Bezos). இன்றைய தேதிக்கு உலகின் நம்பர் 1 பணக்காரர் யார் எனக் கேட்டால் ஜெஃப் பிசாஸ் எனச் சொல்ல முடியும்.

ஜெஃப் பிசாஸ் அமேஸான் பிசினஸைத் தொடங்கிய போது மனிதர் எல்லாவற்றிலுமே தன் மனைவி மெகென்ஸி பிசாஸையும் (MacKenzie Bezos)சேர்த்துக் கொண்டு தான் தொழில் தொடங்கினார்.

சொத்துக்கள், பங்குகள் என அனைத்திலுமே கணவன் மனைவி இருவருமே சேர்ந்து இருந்தார்கள். இப்போது மெகென்ஸி பிசாஸ். ஜெஃப் பிசாஸை விட்டுப் பிரியப் போகிறார். அதாங்க விவாகரத்து வாங்கப் போகிறார்.

 புதுசு புதுசா விமானங்கள்.. சம்மரில் போக்குவரத்தை அதிகரிக்க உத்தேசமாம் புதுசு புதுசா விமானங்கள்.. சம்மரில் போக்குவரத்தை அதிகரிக்க உத்தேசமாம்

விட்டுக் கொடு

விட்டுக் கொடு

இந்த விவாகரத்தின் போது ஜெஃப் பிசாஸ்-க்கு சில பிசினஸ்களை மெகென்ஸி விட்டுக் கொடுத்திருக்கிறார்களாம். மெகென்ஸி வைத்திருக்கும் வாசிங்டன் போஸ்ட் நிறுவன பங்குகளை முழுவதுமாக ஜெஃப் பிசாசிடம் கொடுத்துவிடப் போகிறாராம். அதே போல ஜெஃப் பிசாஸின் கனவுத் திட்டங்களில் ஒன்றான விண்வெளிப் பயணத்தை செயல்படுத்தும் ப்ளூ ஆர்ஜின் நிறுவனப் பங்குகளையும் கணவரிடமே கொடுத்துவிடப் போகிறாராம்.

வாக்குரிமைகள்

வாக்குரிமைகள்

மிகக் குறிப்பாக அமேஸான் நிறுவனத்தில் மெகென்ஸி பெயரில் இருக்கும் பங்குகளுக்கான வாக்களிக்கும் உரிமைகளையும் கணவர் ஜெஃப் பிசாஸுக்கு கொடுத்துவிடப் போகிறாராம். ஆனால் அமேஸான் நிறுவனத்தின் மெகென்ஸி பிசாஸ் வைத்திருக்கும் பங்குகளை விட்டுக் கொடுக்கவில்லை.

திருமணம்

திருமணம்

மெகென்ஸி ஒரு புதின எழுத்தாளர். 1993-ம் ஆண்டில் ஜெஃப் பிசாஸை திருமணம் செய்து கொண்டு நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துவிட்டார். மெகென்ஸியை திருமணம் செய்து கொண்ட பின் தான் 1994-ல் அமேஸான் நிறுவனத்தைத் தொடங்கினார் ஜெஃப் பிசாஸ். மெகென்ஸி பிசாஸ் வந்த நேரமோ என்னவோ ரைஸ் புல்லிங் செய்யும் கலசம் கைக்கு வந்தது போல அமேஸான் நிறுவனம் மேலே மேலே என பறக்கத் தொடங்கி இப்போது உலகையே ஆண்டு கொண்டிருக்கிறது.

4% பங்குகள்

4% பங்குகள்

மெகென்ஸி அமேஸான் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 4% பங்குகளை வைத்திருக்கிறார். இன்றைய தேதிக்கு அமேஸான் நிறுவனத்தின் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் 900 பில்லியன் டாலர். மெகென்ஸி வைத்திருக்கும் 4% பங்குகளுக்கான சந்தை மதிப்பு மட்டும் சுமார் 36 பில்லியன் டாலர். இந்த 36 பில்லியன் டாலரால் தான் நம் மெகென்ஸி பிசாஸ் தற்போது உலகப் பணக்காரிகள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

3-வது இடம்

3-வது இடம்

இந்த விவாகரத்துக்குப் பின் மெகென்ஸி வைத்திருக்கப் போகும் அமேஸான் நிறுவனப் பங்குகளால் மட்டும் உலகப் பெண் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துவிடுவாராம். இப்போது வரை முதல் இடத்தை L'Oreal நிறுவனத்தின் Francoise Bettencourt Meyers-ம் இரண்டாவது இடத்தை உலகின் மிகப் பெரிய சில்லறை விற்பனை நிறுவனமான Walmart குடும்பத்தின் Alice Walton அலங்கரித்து வருகிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

MacKenzie Bezos will be the third biggest women billionaire in the world after divorce

MacKenzie Bezos will be the third biggest women billionaire in the world after divorce
Story first published: Friday, April 5, 2019, 13:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X