லண்டன்: கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் என்ற கம்பரின் வரிகளுக்கு ஏற்ப தான் இப்போது மல்லையாவின் நிலையும். வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து வரும் மல்லையா தன் மனைவி குழந்தைகளை பிரிந்து தனியாக லண்டனில் வாழ்ந்து வருகிறார்.
இருப்பினும் வாரத்திற்கு சுமார் ரூ.16 லட்சம் (18,300 பவுண்டு) செலவாகிறதாம். அதிலும் குறிப்பாக மளிகை செலவுக்கு ரூ.90,000 ஆகிறதாம். 250 பவுண்டுகள் பெட்ரோல் (ரூ.22,500), மற்ற செலவுகள் ரூ.16.48 லட்சம் (18,325 பவுண்டுகள் ) செலவாகிறதாம்.
இது குறித்து லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவின் சொத்துக்களை அலசி ஆராய்ந்து வருகிறது. எஸ்.பி.ஐ வங்கி சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் சமர்பித்த மனுவில் விஜய் மல்லையாவைப் பற்றி அடுக்கடுக்கான முன் வைத்தனர். விஜய் மல்லையா தொடர்ந்து ஆடம்பர வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார். தெருவில் வசிக்கும் மக்களைப் போல் அவர் கஷ்டபட வில்லை. இன்னும் சொல்ல போனால் அவர் எந்தவித பிரச்சனையும் இன்றி வாழ்ந்து வருகிறார்.
வந்து கொண்டுதான் இருக்கு
ஐரோப்பாவில் இயங்கி வரும் கிங்ஃபிஷர் நிறுவனத்திலிருந்து மாதம் 7500 பவுண்டுகள் வரை வருமானம் வந்து கொண்டு தான் இருக்கிறது. குடும்ப சொத்துக்கள், அறக்கட்டளை என தொடர்ந்து அனைத்து வகையிலும் வருமானம் வந்து கொண்டே தான் இருக்கிறது. சூப்பர் பைக்குகள், விலையுயர்ந்த கார்கள், கைவினைப் பொருட்கள் என ஆடம்பரமாக வாங்கி குவித்தாலும், வங்கிக்கு தர வேண்டிய பணத்தை திரும்ப தரவில்லை என்றும் குறிப்பிடப்படுள்ளது. விஜய் மல்லையாவின் மனைவியும் தொழில் பாட்னருமாகிய பிங்கி லால்வானி, தொழில் மூலம் ஈட்டும் ஆண்டு வருமானம் கடந்த வருடத்தை காட்டிலும், தற்போது ஆண்டுக்கு ரூ.1.35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக லண்டன் நீதி மன்றம் கூறியுள்ளது. அதற்காக விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் தரப்பில் உத்திரவிட்டுள்ளது.
விஜய் மல்லையா பற்றி சில
கொல்கத்தாவை சேர்ந்த இவர் முன்னாள் ராஜ்ய சபா மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் ஆவர். இவர் மதுபானம் மற்றும் விமானத் தொழில் முன்னணியில் இருந்தவர். யுனைடெட் ப்ரூவெரீஷ் க்ரூப்ஸ் மற்றும் கிங்க்பிஷ்ஸர் விமான நிறுவனத்தின் தலைவராவர். இவருடைய சொத்து மதிப்பு சுமார் 1.2 பில்லியன் டாலர்களாகும். இதோடு மட்டும் அல்லாது இன்னும் பல தொழில்கள் செய்து வந்தார். குறிப்பாக விளையாட்டு துறைகளிலும் முதலீடு செய்து வந்தார்.
அப்படி என்ன தான் பிரச்சனை
இந்திய அரசு வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளி நாட்டுக்கு வெளி நாட்டுக்கு போகலாம் என்று இந்தியாவுக்கு சொல்லிக் கொடுத்தவர் விஜய் மல்லையாதான். சுமார் 9000 கோடி ரூபாய் கடனை வாங்கி விட்டு, திருப்பி கட்டச் சொன்னால் கட்ட முடியாமல், நான் கடன் வாங்க்கவில்லை, கிங்க் பிஸ்ஷர் நிறுவனம் கடன் வாங்கியது என்று கூறியவர். இதுகுறித்து கடந்த டிசம்பர் 2018ல் இங்க்கிலாந்தின் வெஸ்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையாவின் வழக்கை தீர்ப்பை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியது. அதோடு அவர் கடன் வாங்கி கொண்டு ஓடி போனதையும் உறுதி செய்து அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இருப்பினும் அரசிடம் இருந்து ஏதேனும் வகையில் தப்பி வந்த மல்லையா கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய அரசிடம் ஒப்படைக்க சொல்லி இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்தது. இருப்பினும் இதை எதிர்த்து விஜய் மல்லையாவுக்கு 14 நாட்கள் கெடுவும் கொடுக்கப்பட்டிருந்தது.
பணத்தை பறிமுதல் செய்ய உத்தேசம்
வங்கிகள் மல்லையாவின் ஐசிஐசிஐ வங்கியின் பிரிமியம் கணக்கில் 2,58,000 பறிமுதல் செய்ய காத்திருக்கின்றன. கடந்த 2005 ல் நிறுவப்பட்ட கிங்க் பிஸ்ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கடன்களை 2012ல் முடுக்கிவிட்டதாகவும் தெரிகிறது. ரியல் எஸ்டேட், ஸ்காட்ச், விஸ்கி, பல வித ரேஷ்களை யுனைடெட் ப்ரூவெரிஷ் நிறுவனத்தின் மூலம் செய்து வந்தார் மல்லையா. மேலும் கடந்த சில வருடங்களாக ஆடம்பர வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வந்தார் என்கின்றனர் எஸ்.பி.ஐ வங்கியின் வழக்கறிஞர்கள்.
சில மாதங்களில் இறுதி முடிவு
விஜய் மல்லையா தனது கடனை திருப்பி அடைப்பதற்கான நடவடிக்கையிலும், நீதிமன்றத்திற்கும் தனது முடிந்த அளவு பங்கு வகித்து வருகிறார் என்று விஜய் மல்லையாவின் வழக்கறிஞனர் கூறியுள்ளார். எந்தவொரு கடனாளியும், அவரின் தரப்பு அனுமதியில்லாமல் அவரின் தரத்தை உடைத்து அவரின் சொத்துக்களை அடைய அனுமதிக்கப்படக் கூடாது. மேலும் மல்லையா நீதிமன்ற வரம்புக்குள்ளேயே மல்லையா வாழ்ந்து வருகிறார். வரவிருக்கும் மாதங்களில் இதற்கான ஒரு இறுதி முடிவு வரும் என்று கூறியிருக்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications