புதுசு புதுசா விமானங்கள்.. சம்மரில் போக்குவரத்தை அதிகரிக்க உத்தேசமாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வரப்போகும் சம்மர் ஹாலிடேவை கொண்டாட அதிகப்படியான மக்கள் பல ஊர்களுக்கு பல நாடுகளுக்கு ஊர் சுற்றி பார்க்க செல்வது வழக்கமான ஒன்றாகும். இத்தகைய பழக்கத்தினால் சம்மர் டைமில் எங்கு பார்த்தாலும் கூட்டம் நிரம்பி வழியும், இதனால் வழக்கத்தை விட இந்த மாதங்களில் விமானத்தின் சேவை அதிகரித்தே காணப்படும். இதை குறி வைத்து விஸ்டாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் புதிதாக 14 விமானங்களை விமான சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக விஸ்டாரா நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் இந்த நிறுவனத்தின் 14 விமானங்கள் பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், ஹைதராபாத் - புனே போன்ற வழித்தடங்களில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், தேவை அதிகரிப்பின் காரணமாக அதிகமாக விமான சேவை அதிகரிக்கப்படும்.

 புதுசு புதுசா விமானங்கள்.. சம்மரில் போக்குவரத்தை அதிகரிக்க உத்தேசமாம்

ஏப்ரல் 16 முதல் ஜூலை 15 வரையிலான காலத்தில் மும்பை - பெங்களுரு வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 5 முறையும், மும்பையிலிருந்து ஹைதராபாத், கொல்கத்தா, ஹைதராபாத் - புனே வழித்தடத்தில் தலா ஒரு முறையும் விமானங்கள் இயக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய தொழிற்கொள்கைகளை வரப்போகும் அரசே அமல்படுத்தும்.. நிறுவனங்களை ஊக்குவிக்கும்.. சுரேஷ் பிரபு புதிய தொழிற்கொள்கைகளை வரப்போகும் அரசே அமல்படுத்தும்.. நிறுவனங்களை ஊக்குவிக்கும்.. சுரேஷ் பிரபு

ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் நிலவி வரும் குழப்பங்கள் காரணமாக அந்த நிறுவனத்தின் விமான சேவை மிகப் பாதிபடைந்துள்ளது. இதனால் மற்ற விமானங்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பாகவே இருக்கும். இதன் காரணமாக சில விமான நிறுவனங்கள் புதிய விமானங்களை வாங்கி வருகின்றன.

மேலும் ஹைதராபாத் முதல் புனே வரை தினமும் ஒரு முறையும், இந்த சேவை ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 30 வரை வழங்கப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமான சேவை அதிகரிப்பு மக்களிடையே ஒரு குதூகளிப்பையே ஏற்படுத்தியுள்ளது. சம்மர் நேரத்தில் பல பயணிகள் பேருந்து, ரயில் என பல சேவைகளை பயன்படுத்தினாலும் விமானத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்தே காணப்படும். ஆனால் தற்போதைய காலகட்டங்களில் பொருளாதாரமும் வளர்ந்து வரும் இந்த நிலையில், நேரத்தை கணக்கிட்டு செலவிடும் நிலையில் தான் மக்கள் இருக்கின்றனர், இதற்காக விமான சேவை ஒரு வர பிரசாதமாகவே உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: vistara
English summary

Vistara will add new 14 flights in domestic network

Vistara will add additional service are being to Bengaluru, Kolkata, Mumbai, hydrabad – pune, delhi rutes in demand, during the peak traval month of april – july.
Story first published: Friday, April 5, 2019, 13:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X