சிகாகோ: Boeing நிறுவனத்தின் ஸ்டார் விமானமான, அதிக வருவாய் மற்றும் லாபத்தைக் கொண்டு வந்து கொட்டக் கூடிய Boeing 737 மேக்ஸ் ரக விமானங்களின் உற்பத்தியை தற்காலிகமாக குறைத்திருப்பதாக போயிங் நிறுவனமே சொல்லி இருக்கிறது.
எத்தியோப்பியாவில் கடந்த மார்ச் 10, 2019 அன்று போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி 157 பேர் உயிரிழந்தனர்.
இதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் அக்டோபரில் 2018-ல் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விபத்துக்கு உள்ளாகி வெடித்துச் சிதறியது. அதில் 189 பேர் பலியானார்கள்.
Boeing 737-க்கு தடை
இந்த தொடர்ச்சிக்குப் பின் ஒவ்வொரு நாடாக முன்வந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை பயன்படுத்தத் தடை விதித்தது. சீனா, எத்தியோப்பியா, இந்தியா, கேமன் தீவுகள், அர்ஜிண்டினா, மெக்ஸிகோ என நாடுகள் பட்டியல் நீண்டு கொண்டே போனது.
ஒரு ஆண்டில்
தற்போது ஒரு மாதத்தில் 52 Boeing 737 மேக்ஸ் ரக விமானங்களைத் தயாரித்து வருகிறது போயிங். இனி ஒரு மாதத்தில் வெறும் 42 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்படுமாம். ஏன் உற்பத்தியைக் குறைக்கிறீர்கள் எனக் கேட்டால் "மேலே சொன்ன இரண்டு விபத்துக்களால் விமானங்களை ஆர்டர் கொடுத்த பல நாடுகளுக்கும் தங்கள் விமானங்களை டெலிவரி எடுத்துக் கொள்ள தயங்குகிறார்களாம். எனவே இதுவரை உற்பத்தி செய்த விமானங்களே கையில் நிறைய தேங்கி இருக்கிறதாம். அதனால் தான் இந்த உற்பத்தி குறைப்பாம்.
விபத்துக் காரணம்
stall-prevention system என ஒரு மென் பொருளை போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தில் பொருத்தி இருக்கிறார்கள். இந்த மென் பொருள் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அதிரடியாக, மிக வேகமாக, மேல் எழும்புவதைத் தடுத்து நிலையாக பறக்க வசதியாக வடிவமைத்திருக்கிறார்களாம். இந்த மென் பொருள் தான் air lion flight 610 & ET 308 விமான விபத்துக்களூக்கு காரணமாக இருக்கலாம் என அழுத்தமாக சந்தேகிக்கிறார்களாம் விமான விபத்து நிபுணர்கள்.
சரி செய்வோம்
ஏற்கனவே எத்தியோப்பியாவிலும், இந்தோனேசியாவிலும் நடந்த விமான விபத்து ஒரு தொடர் சம்பவங்களால் நடந்ததாக இருக்கிறது. அதற்கு இந்த stall-prevention system முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த சிக்கலை சரி செய்வது எங்கள் கடமை, அதை எப்படி செய்வது என்றும் எங்களுக்கு தெரியும். அதை செய்தும் வருகிறோம் எனச் சொல்லி இருக்கிறார் போயிங் நிறுவனத்தின் சி இ ஓ டென்னில் முலென்பர்க் (Dennis Muilenburg).
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications