சமீபத்தில் தான் கூகுள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் இந்தியாவின் ராஜன் ஆனந்தன். கடந்த எட்டு ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், இந்தியாவில் கூகுளின் சேவையை விரிவுபடுத்தியதற்காகவும் ராஜன் ஆனந்தன் பெருமையாக பேசப்பட்டார்.
இப்படிப்பட்ட ஒருவர் கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருக்கும், அதே மாதத்தில் ஒரு இந்தியர் மீண்டும் கூகுள் நிறுவனத்தில் ஒரு பெரிய பதவியை பிடித்திருக்கிறார். அவர் பெயர் மயூரி காங்கோ (Mayuri Kango).
இந்த இந்தியப் பெண் தான் கூகுள் நிறுவனத்தின் துறைகளுக்கு - ஏஜென்ஸிகளுக்குமான உறவுமுறைகளைப் (Industry - Agency relationship) பார்த்துக் கொள்ளும் தலைவராக பதவியேற்று இருக்கிறார்.
பாலிவுட் நடிகை
மயூரி காங்கோ Mayuri Kango ஒரு முன்னாள் பாலிவுட் நடிகை என்பதும் அவர் புகழுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. 1990-களில் இருந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த மயூரி காங்கோ, 1996-ல் வெளியான ‘பாபா கெஹத்தே ஹேன்' (அப்பா சொல்றாரு) என்கிற படத்தில் நடித்ததற்கு பெரிதும் பாராட்டப் பட்டார். அதற்கு பிறகும் பல வணிக வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.
அமெரிக்கா எம்பிஏ
பாலிவுட்டில் ஒரு கை பார்த்த பின் 2003-ம் நடிப்புக்கு டாடா சொல்லிவிட்டார். அதன் பிறகு ஒரு வெளிநாடு வாழ் இந்தியரான ஆதித்யா தில்லானை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அப்படியே நியூயார்க்கில் இருக்கும் சிட்டி பல்கலைக்கழகத்தில் தன் எம்பிஏ பட்டப் படிப்பையும் முடித்து தன்னை வளர்த்துக் கொண்டார்.
அடிப்படை படி
எம்பிஏ முடித்த உடன் ஒரு அமெரிக்க நிறுவனத்திலேயே துணை மீடியா மேனேஜராக வேலை பார்க்கத் தொடங்கினார். தன் எம்பிஏ பட்டப் படிப்பைப் பயன்படுத்தி இந்த ஏஜென்ஸிகளை சமாளிக்கும் அடிப்படை வேலைகளை முழுமையாக அமெரிக்காவிலேயே கற்றுக் கொண்டார்.
இந்தியாவில் வேலை
அடிப்படைகளை எல்லாம் அமெரிக்காவிலேயெ கற்றுக் கொண்ட பின் மீண்டும் இந்தியாவின் குருகிராமில் வந்து செட்டிலாகிவிட்டார். இந்தியாவில் Publicis Groupe என்கிற நிறுவனத்தில் வேலை பார்க்கத் தொடங்கினார். அதிலும் பல வருடங்கள் நல்ல பணி அனுபவம் பெற்ற பின் தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார்.
மயூரி கருத்து
கூகுள் நிறுவனத்தோடு சேர்ந்து வேலை பார்ப்பதும், கூகுள் சார்பாக DAN and Publicis போன்ற நிறுவனங்களோடு சேர்ந்து செயல்பட வேண்டிய பெரிய பொறுப்பும் என்னை மிகவும் பூரிப்படையச் செய்கிறது. என் கடந்த 10 ஆண்டு கால ப்ரொஃபெஷனல் வாழ்கையையையும், அனுபவங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி இந்த உறவு முறையை மேலும் வளர்ப்பேன் எனச் சொல்லி இருக்கிறார். அதோடு கூகுளில் பணி புரிவது தன் ப்ரொஃபெஷனல் வாழ்கையின் இரண்டாம் கட்டமாக இருக்கும் எனவும் எதிர்பார்ப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications