மும்பை: டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு ஸ்டீல் உற்பத்தி செய்து சாதனை படைத்திருக்கிறது.
டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் மொத்த ஸ்டீல் உற்பத்தி கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் 16.79 மில்லியன் டன்களாக அதிகரித்திருக்கிறது.
இதில் 4.2 மில்லியன் டன்கள் bhushan steel நிறுவனத்தை டாட்டா கையகப்படுத்தியதால் கிடைத்த உற்பத்திக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.
பூஷன் ஸ்டீல்
கடந்த 2018 ஆம் ஆண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் பூஷன் ஸ்டீல் நிறுவனத்தை கையகப்படுத்தியது. அதன் பிறகு தான் டாடா ஸ்டீல் நிறுவனத்தால் இந்த அபரிவித வளர்ச்சியைக் காண முடிந்தது என்பதையும் பங்குச் சந்தை வல்லுநர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.
ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல்
இந்த புதிய கணக்கின்படி இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராக டாட்டா ஸ்டீல் கொடி நட்டு முன்னிலை வகிக்கிறது. கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் அதிக ஸ்டில் உற்பத்தி செய்து முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது. இந்த 2018 - 19 நிதியாண்டுக்கு ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் 16.75 மில்லியன் டன் ஸ்டீல்களை உற்பத்தி செய்ய இலக்காக வைத்து இருந்தது. ஆனால் இன்று வரை எவ்வளவு மில்லியன் டன் ஸ்டீலை உற்பத்தி செய்தது என்கிற விவரம் வெளியாகவில்லை.
கலங்கும் ஐரோப்பா
சமீப காலமாக, டாடா ஸ்டீல் நிறுவனம் இந்தியாவில் இரும்பு உற்பத்தியை பெரிய அளவில் முன்னெடுத்து வருகிறது. மற்ற நாடுகளில் செய்யும் வியாபாரங்களைக் கூட அடுத்த கட்டமாகத் தான் டாடா ஸ்டீல் நிறுவனம் பார்க்கிறதாம். உதாரணமாக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்தில் கடந்த 2018 - 19 நிதியாண்டில் 3.7% மொத்த உற்பத்தி சரிந்து 10.3 மில்லியன் டன்களாக மட்டுமே இருக்கிறதாம்.
இந்தியா சந்தை
அதைக் கூட கண்டு கொள்ளாமல் வியாபாரம் இந்தியாவில் வியாபாரம் பெருக்குவதையே கவனமாக பார்த்து வருகிறார்களாம். காரணம் அரசு மேற்கொள்ளும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே வியாபாரத்தை விரிவாக்க, உற்பத்தியை அதிகரிக்க முயன்று கொண்டிருக்கிறது டாடா ஸ்டீல்.
செயில்
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் கடந்த 2018 19 நிதி ஆண்டில் 16.3 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்து தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஆக இப்போது ஜே எஸ் டபிள்யூவின் விவரங்கள் வரும் பட்சத்தில் யார் இந்தியாவில் பெரிய ஸ்டீல் உற்பத்தியாளர் என்கிற விவரம் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications