உலகின் தலை சிறந்த விமான நிலையம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்..!

உலகின் வணிக நகரம் என்றால் அது சிங்கப்பூர் தான். சிங்கப்பூரின் சாங்கி (Changi)விமான நிலையம் தான், உலகின் சிறந்த விமான நிலையாமாக 2018-ஆம் ஆண்டுக்கும் தேர்தெடுக்கப் பட்டிருக்கிறது.

2018-ம் ஆண்டையும் சேர்த்து கடந்த ஏழு ஆண்டுகளாக உலகின் சிறந்த விமான நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்.

உலகின் தலை சிறந்த விமான நிலையம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்..!

'ஸ்கைடிராக்ஸ்'(Skytrax) என்கிற நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் Skytrax நிறுவனம் உலக விமானப் பயணிகளிடம் விமான நிறுவனங்களைப் பற்றியும், அதன் வசதிகள் திருப்திகரமாக இருக்கிறதா என ஒரு சர்வே நடத்தும். அந்த சர்வேயின் அடிப்படையில் தான் உலகின் சிறந்த விமான நிலையங்களைத் தேர்ந்தெடுக்கிறார்களாம்.

2018-ம் ஆண்டு சர்வேக்கு உலகம் முழுவதில் இருந்தும் சுமார் 1.30 கோடிக்கும் மேற்பட்ட பயணிகளிடம் இந்த சர்வேக்களை நடத்தி விமான நிலையங்களை தேர்வு செய்திருக்கிறார்களாம்.

இந்த முறை சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சாங்கி விமான நிலையத்தில் இருக்கும் பட்டாம் பூச்சி தோட்டம், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குள வசதிகள் அதோடு இந்த விருது அறிவிக்க சில வாரங்களுக்கு முன் திறந்திருக்கும் 10 மாடி புதிய ஷாப்பிங் மால், நீர் வீழ்ச்சிகள், உள் அரங்கிலேயே அமைத்திருக்கும் காடுகள் என பல அம்சங்கள் சாங்கி விமான நிலையத்தை முன்னிலைப் படுத்துகிறது.

சாங்கி விமான நிலையத்துக்கு அடுத்து ஜப்பானின் டோக்கியோ விமான நிலையம் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனால் உலகின் சுத்தமான விமான நிலையங்கள் பட்டியலில் ஜப்பானின் டோக்கியோ முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+