புதிய திருப்பம்.. லட்சுமி விலாஸுடன் இணைகிறது இந்தியா புல்ஸ் ஹவுசிங்.. பரபரப்பு காரணம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தென்னிந்தியாவை சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கியுடன் இணைகிறது வீட்டுக் கடன் வழங்கும் இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம்.

இந்தியா புல்ஸ் ஹவுஸிங் நிறுவனத்திற்கு ரூ1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் 41 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மூலதனமும் உள்ளன.

மேலும் இந்த இரு நிறுவனங்களின் இயக்குனர் குழுக்களும் இந்த இணைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த இரு நிறுவனங்களும் இணைந்த பின்னர் 100 லட்சமி விலாஸ் பங்குகளுக்கு இணைப்புக்கு பிந்தைய நிறுவனத்தின் 14 பங்குகள் வழங்கப்படும்.

இரு குழுவும் ஒப்புதல்

இரு குழுவும் ஒப்புதல்

இந்த நிலையில் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்திருந்தாலும், இன்னும் இரு குழுக்களின் பங்குதாரர்களிடம் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை. அதாவது மூன்றில் இரண்டு பங்கு தாரர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இணைப்பு ஏற்கப்படும். இதன் பிறகே ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்குப் பிறகு ஏற்கப்படும். இதன் பின்னர் பங்கு சந்தை அமைப்பான செபியின் அனுமதியும் பெற வேண்டும். மேலும் தேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயம் ஒப்புதல் பெற வேண்டும்.

இணைப்புக்கு பிறகு லட்சுமி விலாஸ்

இணைப்புக்கு பிறகு லட்சுமி விலாஸ்

இணைப்புக்கு பிறகு இந்தியாபுல்ஸ் லட்சுமி விலாஸ் வங்கி என்ற பெயரில் செயல்படும். இப்பொது ஐபிஎச்பெல் நிறுவனத்தின் தலைவராக உள்ள சமீர் கெலாட் இணைப்பு நிறுவனத்தின் துணைத்தலைவராக பொறுப்பேற்பார். அதேபோல் இந்தியா புல்ஸ் துணைத் தலைவர் இயக்குனாராக உள்ள ககன் பாங்க மற்றும் லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் பார்த்தசாரதி முகர்ஜி ஆகிய இருவரும் இணைந்து நிறுவனத்தின் துணை இயக்குனர்களாக பொறுப்பேற்பர். இந்த இணைப்பிற்கு பிறகு நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.19,500 கோடியாக இருக்கும். இப்பொதைக்கு இணைப்பு நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு யாரும் பரிந்துரைக்கபடவில்லை.

இது நான்காவது இணைப்பு

இது நான்காவது இணைப்பு

இணைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேறினால், ஒரு வங்கியுடன் வங்கியல்லாத நிதி நிறுவனம் இணைவது, கடந்த இரண்டு ஆண்டுகளில் இது நான்காவது நிறுவனமாகும். கடந்த 2017 ல் பாரத் பைனான்ஸ் நிறுவனம் இன்டஸ் இந்த் வங்கியுடன் இணைந்தது. இதே 2018ல் ஐ.டி.எப்.சி வங்கி கேபிடல் பர்ஸ்ட் நிறுவனங்களுடன் இணைந்தன. இதே இந்த ஆண்டு பந்தன் வங்கியுடன் கிரஹ் பைனான்ஸ் நிறுவனமும் இணைந்தது.

இந்தியாபுல்ஸ் நிறுவனத்தை மறு சீரமைப்பதற்கான குழுவுக்கு ரிசர்வ் வங்கியின் முன்னள் துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்ரா பொறுப்பேற்றிருந்தார். நிறுவனத்தை சீரமைப்பதிலும் இனைப்பு நடவடிக்கையும் இக்குழு பரிந்துரைந்தது.

 

வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி

வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட இந்தியாபுல்ஸ் நிறுவனம் வட மாநிலங்களில் மிக பிரபலமானதாகும். 95 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட லட்சுமி விலாஸ் தென் மாநிலங்களில் மிகவும் பிரபலமான வங்கியாகும். இந்த வங்கி தற்போது 569 கிளைகளுடன், இந்தியா புல்ஸ் 250 கிளைகளுடனும் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் இந்தியா புல்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி நிதி திரட்ட போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த இரு வங்கிகளின் அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indiabulls housing finance will werge Lakshmi Vilas Bank coming soon

The 93 year old bank in tamilnadu moving to mumbai. the board of lakshmi villas and indiabulls housing finance this week approved the merger between two create what woulb be known as indiabullas
Story first published: Sunday, April 7, 2019, 13:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X