மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு எந்தவொரு நிறுவனமும் முன்வராத நிலையில் அதற்கான மாற்றுத் திட்டம் என்ன என்றும், மாற்றுத் திட்டத்தையும் அளித்து வருகின்றன.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கனவே பல நிதி நெருக்கடியில் உள்ளது அனைவரும் அறிந்தது. இது தற்போது எஸ்.பி.ஐ தலைமையிலான வங்கிக் குழுவின் கட்டுப் பாட்டில் இருப்பது அனைவரும் அறிந்ததே.

இத்திட்டத்தில் பங்குகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்களான டிஜிபி, மற்றும் இன்டிகோ பார்ட்னர்ஸ் மற்றும் அரசு சார்ந்த தேசிய முதலீட்டு மற்றும் கட்டமைப்பு நிதியம் ஆகியன இணைந்து நிறுவனத்தை ஏற்று நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. அதே சமயம் வங்கி குழுவானது டெல்டா ஏர்லைன்ஸ, ஏர் பிரான்ஸ் நிறுவனமான கேஎல்எம் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்த விருப்பம் குறித்தும் ஆராய்ந்து வருகின்றன.
இது தவிர தனியார் முதலீட்டு நிதியமான பிளாக்ஸ்டோன் நிறுவனத்திடம் ஜெட் நிறுவனத்தின் லாய்டி திட்டம் குறித்தும் ஆய்வு செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது. அதாவது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் சீரடைந்த பிறகு , இந்த திட்டம் மூலம் நிதி திரட்ட முடியுமா என்பதை பிளாக்ஸ்டோன் ஆராயும்.
மேலும் அடுத்த 6 மாதங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்த பட வேண்டும் என்பதையே கடன் வழங்கிய வங்கிகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. அதற்கேற்ப தொடர்ந்து செயல்படுவதற்கான முதலீடுகள் கிடைக்கச் செய்வது, இத்துறை வல்லுனர்களை இக்குழுவில் இணைக்கச் செய்வது , கால வரையரையுடன் கூடிய லாப நோக்கத்தை வகுப்பது தற்போதைய முக்கிய நோக்கமாகவே உள்ளது.
அதே சமயம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நடத்த விரும்பும் நிறுவனங்களிடமிருந்து மனுக்களை எஸ்.பி.ஐ தலைமையிலான வங்கிக் குழு பெற்று வருகிறது. இதற்கான கால அவகாசமும் ஏப்ரல் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிபி தலைமையிலான குழு ஜெட் ஏர்வேஸ்ஸை நடத்துவதற்கான விருப்ப நிபந்தனைகளையும் அதில் உள்ள சவாலான நடப்பு பிரச்சனைகளையும் ஆராய்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications