கடன் பிரச்சனையால் நிறுவனத்தை விற்க முடியாத நிலை.. கடனை வாங்க போராடும் எஸ்பி.ஐ

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவத்திற்கு இது போதா காலமே. பல வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில் அவற்றை செலுத்த இயலாத அளவு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதும் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.

 

ஆனால் ஜெட் ஏர்வேஸ்ஸிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கடன் கொடுத்த அனைத்து வங்க்கிகளும் ஸ்டேட் பேங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் தொடர்பான பங்குகளை விற்பது தொடர்பாக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் இது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள எஸ்.பி.ஐ கேபிடல் லிமிடெட் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

 
கடன் பிரச்சனையால் நிறுவனத்தை விற்க முடியாத நிலை.. கடனை வாங்க போராடும்  எஸ்பி.ஐ

மதுரை ரயில் நிலையம் ஃ பைவ் ஸ்டார் ஹோட்டலாக மாறியது  காத்திருக்கும் அறைக்கு கட்டணம் ரொம்ப அதிகம்தாங்கமதுரை ரயில் நிலையம் ஃ பைவ் ஸ்டார் ஹோட்டலாக மாறியது காத்திருக்கும் அறைக்கு கட்டணம் ரொம்ப அதிகம்தாங்க

ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனம் சுமார் 8200 கோடி ரூபாய் இது கடன்வாங்கியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தில் வேலைசெய்யும் ஊழியர்களும் சம்பள பாக்கி மற்றும் விமானங்களுக்கான குத்தகை பாக்கி செலுத்த முடியாத நிலையிலும் உள்ளது.
ஊழியர்கள் ஒரு புறம் போராட்டம் என போராடியதாலும், குத்தகை பாக்கியாலும் பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. இது உள்பட் ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்திற்கு சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மொத்த கடன் சுமை இருக்கலாம் என்றும், இதனால் அன்றாட செயல்பாடுகளுக்கே நிதி பற்றாக்குறை நிலவி வருவதாகவும் அந்த நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது.

இதங்காரணமாக எஸ்பியை இந்த நிறுவனத்தில்முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள், மேலும் நிர்வாகத்தை முழுவதுமாக நிர்வகிக்க நிர்வகித்து கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ள ஆர்வம் உள்ள முதலீட்டாளர்களை எதிர் நோக்கியுள்ளது. மேலும் இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அன்னிய நிறுவனங்களோ இந்த நிறுவனத்தை எடுத்து நடத்துவதற்கு விருப்பத்தை தெரிவிக்கலாம் என்றும் எஸ்.பி.ஐ கூறியுள்ளது.

ஏனெனில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமம், இண்டிகோ, எதியாட், கத்தார் ஏர்வேவஸ் (எதியாட் முழுமையாக வெளியேறும்பட்சத்தில்), ஏர் பிரான்ஸ் கேஎல்எம் டெல்டா, அதானி குழுமம், என்ஐஐஎப் மற்றும் சில பெரு முதலீட்டாளர்கள் ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

எஸ்பிஐ கூட்டமைப்பானது 3.54 கோடி சம பங்குகள் அதாவது, மொத்த மூலனத்தில் 31.2 சதவிகித பங்குகள் அல்லது அதிகபட்சம் 8.5 கோடி பங்குகள் (அதிகபட்சம் 75% பங்குகள்) விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகம் ஸ்டேட் பாங்க் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேசமயம் சுமார் ரூ 1000 கோடி முதல் ரூ.2000 கோடிவரை முதலீடு செய்யவதற்கு ஏற்ற திறன் உள்ளவர்கள் மட்டும் இதில் விண்ணப்பிக்கலாம் என்றும், அதேசமயம் இத்துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் எதிர்பார்க்கப்படுவதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதில் பலர் ஒன்றினைந்து குழுவாகவும் இணைந்து இந்த குழுவை எடுத்து நடத்த விரும்பினாலும், குழுவுக்கு மூன்று பேருக்கும் மேல் இருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மா நில அரசு நிறுவங்கள, பொதுத் துறை நிறுவங்கள், அரசு உதவி பெறும் நிறுவங்கள் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஜெட் ஏர்வேஷ் வசம் 124 விமானங்கள் இருந்தன, ஆனால் அவற்றில் இப்போது 26 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: jet airways
English summary

Banks seeks to sell 75% shares to jet airways

Banks have to proposed offer at least 3.54 crore shares of the airline comprising 31.2 percent of equity share capital of the company and up to a maximum of 8.51 crore shares comprising 75% of the share capital of Jet Airways.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X