சமீபத்தில் வெளியான உலக வங்கி அறிக்கையில் 2018-ம் ஆண்டில் தங்களின் தாய் நாட்டுக்கு அதிகமாக பணம் அனுப்பும் நாடுகளில் இந்தியாவுக்குத் தான் முதலிடம் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி மார்ச் 29, 2019 நிலவரப்படி 411 பில்லியன் டாலராக இருக்கிறது.
கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், பல்வேறு நாடுகளில் இருந்து 79 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு பணத்தை அனுப்பி இந்த சாதனையைச் செய்திருக்கிறார்கள். ஆக இந்தியாவின் இந்த 400+ பில்லியன் டாலர் கையிருப்பில் நம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பெரிய பங்கு உண்டு.
2018-ம் ஆண்டில் இந்தியாவைத் தொடர்ந்து சீனா 67 பில்லியன் டாலர் அனுப்பி இருக்கிறார்கள். மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ 36 பில்லியன் டாலர், நான்காவது இடத்தில் பிலிப்பைன்ஸ் 34 பில்லியன் டாலர், ஐந்தாவது இடத்தில் எகிப்து 29 பில்லியன் டாலர் என தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்புவதில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்திருக்கிறார்கள்.
14% அதிகம்
கடந்த 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் இந்தியாவுக்கு 14% அதிக பணம் அனுப்பப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏகப்பட்ட பண உதவிகள் இந்தியாவுக்கு வந்தததும் இந்த 14% அதிகரிப்புக்கு முக்கிய காரணம் எனச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
2016, 2017
2016-ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 62.7 பில்லியன் டாலர் மட்டுமே வந்ததாம். 2017-ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 65.3 பில்லியன் டாலர் வந்ததாம். ஆனால் 2018-ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 79 பில்லியன் டாலர் வந்திருக்கிறது.
மொத்த உலகில்
இப்படி ஒட்டு மொத்த உலக நாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 2018-ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து தங்கள் சொந்த நாடுகளுக்கு 689 பில்லியன் டாலர் அனுப்பி இருக்கிறார்களாம். இது 2017-ம் ஆண்டின் 633 பில்லியன் டாலரை விட 8.8% அதிகம்.
ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகள்
ஏழை மற்றும் மத்திய வருமான நாடுகளுக்கு 2017-ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து வந்த பணத்தை விட 9.6 சதவிகிதம் கூடுதலாக 2018-ம் ஆண்டில் வந்ததாம். 2018-ம் ஆண்டில் மட்டும் ஏழை மற்ரும் நடுத்தர நாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து 529 பில்லியன் டாலர் வந்திருக்கிறதாம்.
ரெமிட்டன்ஸ்கள்
இப்படி வெளிநாடுகளில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்புவதை Foreign Remittance எனச் சொல்வோம். சீனாவைத் தவிர மற்ற எல்லா நடுத்தர மற்றும் ஏழை நாடுகளிலும் வரும் அந்நிய நேரடி முதலீடுகளை விட இந்த Foreign remittance தான் அதிகமாக இருக்கிறதாம்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications