வாஷிங்டன்: இந்தியாவின் ஒட்டுமொத்த உள் நாட்டு வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7.5 சதவிகிதம் அளவுக்கு உயருமென உலக வங்கி அறிவித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், குறிப்பாக தெற்காசியாவுக்கான அறிக்கையில் முதலீடுகள் அதிகரிப்பு, குறிப்பாக தனியார் துறை சார்ந்த முதலீடுகள், நுகர்வோர் சார்ந்த முதலீடுகள் அதிகரிப்பு, நுகர்வோர் சார்ந்த சந்தை விரிவடைதல் உள்ளிட்ட பல காரணங்களால் உள் நாட்டின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.5 சதவிகிதமாக உயரும் என்றும் உலக வங்கி அறிவித்துள்ளது. இதுவே கடந்த 2018 - 2019 ம் நிதியாண்டில் உற்பத்தி வளர்ச்சி 7.2 சதவிகித அளவுக்கு இருந்தது குறிப்பிட தக்கது.

அதேசமயம் வேளாண் துறை வளர்ச்சி 4 சதவிகித வளர்ச்சி அளவுக்கு அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேவையைப் பொருத்தமட்டில் உள் நாட்டு தேவை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும். அதேசமயம் பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டில் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியின் காரனமாக ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றும், அப்படியே இருந்தாலும் வட்டி விகிதம் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மற்ற வளர்ச்சி விகிதங்கள் குறையலாம் எனவும் தெரிகிறது. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் மாற்றம் சற்று கூடுதலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமானவாகவும் , நடப்பு கணக்கு பற்றாக்குறை உற்பத்தி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications