முதல்வரின் முன்னாள் அதிகாரிகள் வீட்டில் கணக்கில் வராத 281 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கியது..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த இரண்டு நாட்களாக மத்திய பிரதேசத்திலுன், டெல்லியிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அடுத்த சில நாட்களில் தேர்தலை வைத்துக் கொண்டு வருமான வரித் துறை அசால்டாக சோதனை நடத்தி இருக்கிறது.

 

இந்த இரண்டு நாட்களில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் முன்னாள் அதிகாரிகள் வீடுகளில் நடத்திய சோதனையில் முறையாக திட்டமிடப் பட்ட, பலரும் ஈடுபட்டிருக்கும் ஒரு ஊழலைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

சோதனையின் போது கணக்கில் வராத 281 கோடி ரூபாய் வரைக்கான பணம் சம்பந்தப்பட்ட தரவுகள் சிக்கி இருப்பதாக வருமான வரித் துறை தன் ஸ்டேட்மெண்ட்களில் சொல்லி இருக்கிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இபிஎஸ் வரப்பிரசாதம் - யாருக்கு எவ்வளவு லாபம் தெரியுமா

ஹவாலா

ஹவாலா

இந்த கணக்கில் வராத பணத்தில் இருந்து ஒரு பகுதி பணம் டெல்லியில் இருக்கும் ஒரு அரசியல் கட்சியின் தலைமையகத்துக்கு அனுப்பி இருக்கிறார்களாம். அதோடு 20 கோடி ரூபாயை ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் செய்திருக்கிறார்களாம். அதுவும் ஒரு டெல்லி அரசியல் பிரமூகர் மூலம் செய்திருப்பதையும் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.

பணம், மது, புலித் தோல்

பணம், மது, புலித் தோல்

புலித் தோல், கணக்கில் வராத 14.6 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம், 252 பாட்டில் நிறைய மது வகைகள், சில துப்பாக்கிகள் என பல விஷயங்களைக் கைப்பற்றியதாக தங்கள் ஸ்டேட்மெண்ட்களில் சொல்லி இருக்கிறார்கள் வருமான வரித் துறையினர்கள்.

தெளிவான விவரங்கள்
 

தெளிவான விவரங்கள்

அதோடு ஒரு டைரியில் பணம் வந்தது, பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்தும் விரிவாக கையால் எழுதி இருக்கிறார்களாம். அந்த டைரியும் வருமான வரித் துறையினரிடம் சிக்கி இருக்கிறதாம். அதோடு சில கணிணிக் கோப்புகளும், எக்ஸெல் கோப்புகளும் டைரிகளில் எழுதி இருக்கும் விவரங்கள், பணம் போன்றவைகளை உறுதி செய்கிறதாம்.

அதிகாரிகள் வீட்டிலும் சோதனை

அதிகாரிகள் வீட்டிலும் சோதனை

மத்தியப் பிரதேச முதல்வரின் தனிச் செயலாளர் பிரவீன் கக்கரின் வீடு இந்தூரில் இருக்கிறது. அவர்கள் வீட்டில் ஐடி துறையினர் சோதனை செய்திருக்கிறார்கள். அதோடு கமல்நாத்தின் முன்னாள் ஆலோசகர் ராஜேந்திர குமார் மிக்லானியின் டெல்லி வீட்டிலும் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

இந்த சோதனைகளில்

இந்த சோதனைகளில்

230 கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்துக்கான ஒரு கேஷ் புக், 242 கோடி ரூபாய் பணத்தை, போலி பில் ரசீதுகளைக் காட்டி பரிமாற்றம் செய்திருக்கும் ஆவணங்கள் என பலதும் சிக்கி இருக்கிறதாம். வரி செலுத்த தேவை இல்லாத நாடுகளை டாக்ஸ் ஹெவன்ஸ் என்று சொல்வோம். அப்படி டேக்ஸ் ஹெவன் நாடுகளில் 80 நிறுவனங்கள் நடத்துவதற்கான ஆதாரங்களும் சிக்கி இருக்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

it department got the proof of rupees 281 crore cash had collected from some people

it department got the proof of rupees 281 crore cash had collected from some people
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X