ஒவ்வொரு நாளும் ரூ.23 கோடி மதிப்புகூடிய இந்திய நிறுவனம்..! செம லாபத்தில் முதலீட்டாளர்கள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகத்தின் ஒவ்வொர் துறைக்கும் ஒரு மொழி இருக்கிறது. ஒரே அங்கில வார்த்தைக்கு மருத்துவத்தில் ஒரு அர்த்தம் வரும், பொருளாதாரத்தில் ஒரு அர்த்தம் வரும், சட்டத்தில் ஒரு அர்த்தம் வரும். அது போல ஸ்டார்ட் அப்-களுக்கும் ஒரு வித மொழி இருக்கின்றன.

 

பொதுவாக யுனிகார்ன் என்றால் ஒற்றைக் கொம்புள்ள குதிரையைத் தான் சொல்வார்கள். ஸ்டார்ட் அப் மொழியில் யுனிகார்ன் என்றால் ஒரு பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 7000 கோடி ரூபாய்) மேல் மதிப்புள்ள நிறுவனங்களைத் தான் அப்படி அழைப்பார்கள். இப்போது அப்படி ஒரு இந்திய கேமிங் ஸ்டார்ட் அப் நிறுவனம், இந்தியாவில் யுனிகார்ன் அந்தஸ்தை எட்டி இருக்கிறது.

இந்திய ஸ்டார்ட் அப் சரித்திரத்திலேயே ஒரு கேமிங் நிறுவனம், இந்த யுனிகார்ன் ஸ்டேட்டஸை எட்டிப் பிடிப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன் பல்வேறு துறை சார்ந்த இந்திய ஸ்டார்ட் அப்கள், இந்தியாவிலேயே யுனிகார்ன் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனால் கேமிங் துறையில் இந்த Dream11 Fantasy Pvt. Ltd. தான் முதன்முறையாக இடம் பிடித்திருக்கிறது.

அந்த நிறுவனம்

அந்த நிறுவனம்

Dream11 Fantasy Pvt. Ltd என்கிற நிறுவனம் தான் அந்த புதிய கேமிங் துறை சார்ந்த இந்திய ஸ்டார்ட் அப் யுனிகார்ன் நிறுவனம். இந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட சதவிகித பங்குகளை சமீபத்தில் ஸ்டெட்வியூ கேப்பிட்டல் (Steadview Capital) என்கிற ஹாங்காங் நிறுவனம் வாங்கியது. அப்போது தான் Dream11 Fantasy Pvt. Ltd. நிறுவனத்தின் மதிப்பு 1.5 பில்லியன் டாலராக (10,500 கோடி ரூபாயாக) அதிகரித்திருக்கும் விஷயம் வெளியில் தெரிய வந்தது.

700 மில்லியன்

700 மில்லியன்

ஏழு மாதங்களுக்கு முன் Dream11 Fantasy Pvt. Ltd. நிறுவனத்தில் டென்செண்ட் ஹோல்டிங்ஸ் (Tencent Holdings ltd) என்கிற சீன நிறுவனம் 100 மில்லியன் டாலரை முதலீடு செய்தது. அப்போது Dream11 Fantasy Pvt. Ltd. 700 மில்லியன் டாலருக்கு (4900 கோடி ரூபாயாக) மட்டுமே மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீடு 2018 செப்டம்பர் வாக்கில் செய்யப்பட்டது.

மாதம் 100 மில்லியன்
 

மாதம் 100 மில்லியன்

ஆக கடந்த 2018 செப்டம்பர் தொடங்கி ஏப்ரல் 2019 வரையான ஏழு மாதங்களில், ஒவ்வொரு மாதமும் இந்த Dream11 Fantasy Pvt. Ltd. நிறுவனத்தின் மதிப்பு சுமார் 100 மில்லியன் டாலர் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. அதோடு ஐபிஎல் வேறு பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதால் நிறுவனத்தின் மதிப்பீடு இன்னும் களைகட்டிக் கொண்டிருக்கிறதாம்.

Dream11 Fantasy Pvt. Ltd.

Dream11 Fantasy Pvt. Ltd.

கிரிக்கெட், கால்பந்து, கபடி என பல்வேறு விளையாட்டுகளுக்கு ஒரு கற்பனை விளையாட்டுப் போட்டி போல நடத்தச் செய்யும் ஒரு விதமான கேமிங் நிறுவனம் இது. இந்த செயலியை இன்றைய தேதிக்கு சுமார் 6 கோடி பேர் பயன்படுத்துகிறார்களாம். இந்த 2019-க்குள் மொத்த பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை 10 கோடி பேராக அதிகரிக்கப் போகிறார்களாம். இது தான் அவர்களின் திட்டமாம்.

நிறுவனர்கள்

நிறுவனர்கள்

எங்கள் Dream11 Fantasy Pvt. Ltd. நிறுவனத்தின் மதிப்பு 1.5 பில்லியன் டாலராக அதிகரித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களை நம்பி முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் சரி, வாடிக்கையாளர்களும் சரி இருவருமே ஒன்று தான். எனவே அவர்களை திருப்தி படுத்தும் விதத்தில் இன்னும் நன்றாக உழைப்போம் எனச் சொல்லி இருக்கிறார்கள் Dream11 Fantasy Pvt. Ltd. நிறுவனத்தின் நிறுவனர்கள் ஹர்ஷ் ஜெயின் மற்றும் பவித் சேத்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

now Dream 11 Fantasy Private limited is an unicorn indian start up company

now Dream 11 Fantasy Private limited is an unicorn indian start up company
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X