கடனில் தத்தளித்து வரும் ஜெட் ஏர்வேர்ஸ்.. கண்ணீர் விடும் ஊழியர்கள்.. கைகொடுக்கும் நிறுவனங்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனம் கடனில் முழ்கியதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஆர்வம் உள்ளவர்கள் ஏப்ரல் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று எஸ்.பி.ஐ கூறியிருந்தது. இதன் அடிப்படையில் இறுதி நாளான இன்று வரை பல வெளி நாட்டு விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன.

 

ஏற்கனவே கடனில் தவிக்கும் ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாததிற்கான ஊழியத்தை இந்த மாத தொடக்கத்தில் அழிக்க வேண்டும். ஆனால் தேதி 9 ஆகிய இந்த நிலையிலும் கூட இதுவரை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க 9தேதி என்ற நிலையில் பல வெளி நாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டுள்ளன.

கடனில் தத்தளித்து வரும் ஜெட் ஏர்வேர்ஸ்.. கண்ணீர் விடும் ஊழியர்கள்.. கைகொடுக்கும்  நிறுவனங்கள்

ஊழியர் சம்பளம் மட்டும் அல்லாது நிறுவனத்தின் செலவுக்கான பணத்தை செலவிட முடியாததால், ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனம் தனது விமான சேவையை ஏற்கனவே குறைத்துள்ள நிலையில் மேலும் தற்போது தனது சேவையை முடக்கியுள்ளது.

மேலும் இந்த நிறுவனத்தின் வெளி நாட்டு நிறுவனத்தின் பங்குதாரான எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தன்னிடம் உள்ள பங்க்குகளை எஸ்.பி.ஐக்கு விற்க விரும்புவதாக தெரிவித்துள்ளது. அதேசமயம் ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்தை வாங்க பல வெளி நாட்டு நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

இதில் குறிப்பாக டி.ஜி.பி கேபிடல், பிளாக்ஸ்டோன்,லூஃப்தன்ஸா,சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர் ஃபிரான்ஸ் கேஎல் எம், மற்றும் கேகே ஆர் ஆகிய நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நரேஷ் கோயலிடம் மற்றும் எதிஹாட் ஏர்லைன்ஸ் ஆகியோரிடம் அதிக பங்குகள் உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், அந்த இரு பங்குதாரர்களும் இதுவரை இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க ஒப்புதல் அனுப்பவில்லை.எனினும் ஸ்டேட் பேங்கின் பங்கினை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிகிறது.

 

இதன் மூலம் கூடிய விரைவில் ஜெட் ஏர்வேர்ஸ்ஸின் குறிப்பிட்ட பங்குகள் கூடிய விரைவில் விற்பனைக்கு வரக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

other countries airlines are intrested in buying jet airways

Global private equity firm TPG Capital, lufthansa are among six entities who are believed to have sown intrest in the expression of interest stake sale process of the debt ridden jet airways.
Story first published: Tuesday, April 9, 2019, 20:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X