டெல்லி : பிரிட்டனின் ஐரோப்பிய ஒப்பந்தத்தால், இந்தியா ஐரோப்பிய நாடுகளுடன் மேற்கொள்ளும் வர்த்தகத்தில் எந்த வித பாதிப்பும் இருக்காது என்று ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் அறிவித்துள்ளன.
டெல்லியில் பிஎச்டி வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் இந்தியாவிற்கான ஐரோப்பிய கூட்டமைப்பின் தூதர், டோமாஸ் கோஸ்லொவ்ஸ்கி கூறியதாவது, பிரிட்டன் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் கீழ் 28 நாடுகள் அடங்கிய ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுகிறது.
இதனால் ஐரோப்பிய நாடுகளில் இந்தியா செய்து வரும் வர்த்தகம், முதலீடு மற்றும் வணிக ஒப்பந்தங்கள் போன்றவற்றுக்கு எந்த விதத்திலும் பாதிப்பும் ஏற்படாது என்று ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தாயுடன் பழகியதால் ஆத்திரம்.. சிவகங்கை மருத்துவமனையில் மருந்தாளுரை குத்திக்கொன்ற இளைஞர்
முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்
இந்தியாவும் ஐரோப்பிய கூட்டமைப்பும், தாராள ஒப்பந்தம், முதலீடு பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவை தொடர்பான முடிவை விரைந்து எடுக்க வேண்டும். அந்த ஒப்பந்தம் இரு தரப்பினரிடையே பொருளாதார வளார்ச்சிக்கு உதவும். இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும் வர்த்தக வசதி வாய்ப்புகளை மேம்படுத்தி, வரியினங்களை குறைத்தால் பரஸ்பர வர்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும்.
பரஸ்பர வர்த்தகம் 20,000 கோடி டாலராக உயரும்
இது கடந்த, 2017 - 2018ம் நிதியாண்டில், இந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு இடையிலான, பரஸ்பர வர்த்தகம், 14,100 ஆயிரத்து கோடி டாலராக இருந்தது. இது தாராள வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், 2022ல், 20,000 கோடி டாலராக உயர வாய்ப்புள்ளது.
வணிகச் சீர்திருத்தங்கள்
ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் வணிக சீர்திருத்தங்கள், வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள், இந்தியாவுக்கு மேலும் பயன் அளிக்கும். மேலும் சர்வதேச பொருளாதார விதிகளின் அடிப்படையில், வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு, இந்தியாவும் ஐரோப்பிய கூட்டமைப்பும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். குறிப்பாக ‘ஜி-20' மற்றும் உலக வர்த்தக அமைப்புடன் இணைந்து செயல்பட்டு சர்வதேச பொருளாதார விதிமுறைகளின் புதிய வடிவமைப்பிற்கும், மறுகட்டமைப்பிற்கும் வழிகோல வேண்டும்.
எந்தவித பாதிப்பும் இருக்காது
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன், இந்தியா மிகச் சிறந்த முறையில் பரஸ்பர வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. ‘பிரெக்ஸிட்' ஒப்பந்தப்படி, மே,22ல், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி பிரிட்டன், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறினாலும், அதனால் இந்திய பொருளாதாரமோ அல்லது வர்த்தக உறவோ சிறிதும் பாதிக்கப்படாது. எந்தவித தாக்கமும் ஏற்படாது என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications