டெல்லி : ரிசர்வ் வங்கி வங்கிகளூக்கு அளிக்கும் கடனுக்கு, வட்டிவிகிதத்தை 0.25% சதவிகிதம் குறைத்த நிலையில், சில வங்கிகள் இதன் அடிப்படையில் கடனுக்கான வட்டியை குறைத்து வந்தன, இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் வட்டி குறைப்பு இன்று முதல் (ஏப்ரல் 10. 2019) அமலுக்கு வந்துள்ளன.
இந்த வட்டிக் குறைப்பு குறிப்பாக வீட்டுக்கடன், வாகனக்கடன் வைத்துள்ளோருக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எஸ்.பி.ஐயின் வட்டி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

அதேபோல எஸ்.பி.ஐ வங்கி ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தையும் குறைத்திருந்தது கவனிக்க வேண்டிய விஷயமே. இதன்படி எஸ்.பி.ஐ வங்கியில் MCLR வட்டி விகிதம் 8.55 சதவிகிதமாக இருந்த நிலையில் அதை இன்று முதல் 8.50 சதவிகிதமாகக் குறைத்து அமல்படுத்தியுள்ளது.
MCLR வட்டி விகித குறைப்பு மட்டுமில்லாமல் எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடன் திட்டம் மீதான வட்டி விகிதத்தை 0.10 சதவிகிதம் குறைத்துள்ளது. இதனால் 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் திட்டம் மீதான வட்டி விகிதம் இன்று முதல் (ஏப்ரல் 10,2019) 8.60 முதல் 8.90 சதவிகிதமாக இருக்கும். ஆனால் ஏற்கனவே இது 8.70 முதல் 9.00 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2019 மே 1-ம் தேதி முதல் எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் உள்ள 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்புத் தொகை வைத்திருந்தால் வட்டி விகிதம் 3.50 சதவிகிதத்திலிருந்து 3.25 சதவிகிதமாகக் குறையும்.
ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்துடன் சேமிப்பு கணக்குகளையும் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைத்ததினால் இந்த வட்டி விகித குறைப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறைவதும், அதிகரிக்கும் போது வட்டி விகிதம் உயர்வதும் இயல்பான ஒன்றுதான். ஆக இந்த வட்டி குறைப்பால யாரேனும் ஒருவர் பயன் அடைந்தாலும் நன்மைதானே.


Click it and Unblock the Notifications