வேலைக்கு போகலாயாம்.. வருமானம் மட்டும் ரூ.8.5 லட்சமாம்..கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வருமானம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பீஹாரில் உள்ள பேகுசராயில் போட்டியிடும் இந்திய கம்யூனிட் கட்சியின் வேட்பாளர் கன்கையா குமார் வேலையில்லா பட்டதாரியாவர். இவர் தனது 2 வருட கால வருமானம் ரூ.8.5 லட்சம் எனத் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வருமானம் நூல் மூலம் தனது எழுத்துகள், பல்வேறு பல்கலைக் கழகங்களில் கொடுத்த சொற்பொழிவுகளின் மூலமாகவும் ஈட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் கன்கையா தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளது.

வேலைக்கு போகலாயாம்.. வருமானம் மட்டும்  ரூ.8.5 லட்சமாம்..கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வருமானம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவைத் தலைவராக இருந்தபோது மத்திய அரசிற்கு எதிராக நடத்திய போராட்டத்தில் மூலம் பிரபலமானவர் கன்கையா. இங்கு முனைவர் பட்டம் பெற்ற கன்கையாவுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. ஆனால், அவர் மாணவர் போராட்டத்தில் கைதான அனுபவத்தை 'பிஹாரில் இருந்து திஹார்' எனும் பெயரில் நூலாக வெளியிட்டார். இதன் மூலம் வருமானத்தையும் பெற்றுள்ளார்.

மேலும் தனது சொத்தாக பெரிதும் எதுவும் இல்லை. தனது கையிருப்பு மொத்தம் ரூ.24,000 எனவும், அதுவே வங்கியில் உள்ள சேமிப்பு ரூ.3,57,848 எனவும், இதுவே தனது மொத்த சொத்து மதிப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஜிடிபி கணக்கீடுகளில் தவறு இருக்கிறது..! IMF-ன் கீதா கோபிநாத் அதிரடி..! இந்தியாவின் ஜிடிபி கணக்கீடுகளில் தவறு இருக்கிறது..! IMF-ன் கீதா கோபிநாத் அதிரடி..!

தனது குடும்பத்தை பற்றி சொல்லுகையில், தன் தந்தை ஒரு விவசாயி என்றும், தனது தாய் அங்கன்வாடி பணியாளர் எனவும் குறிப்பிட்டுள்ள கன்கையாவின் பரம்பரை சொத்து 1.5 ஏக்கர் நிலம் மட்டுமே. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். ஆக தன் தேர்தல் செலவிற்காக பொதுமக்கள் தலா ரூ.1 தரும்படி கன்கையா குமார் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதில் அவருக்குப் போதும் போதும் எனக் கூறிய போதும் கூட ரூ.70 லட்சம் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 2016-ல் தேசவிரோத வழக்கில் கன்கையா கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், நாடு முழுவதிலும் பிரபலமாக்கப்பட்டார். மேலும் தேசவிரோதம் உள்ளிட்ட 4 வழக்குகள் இவர் மேல் நடைபெற்று வருவதையும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பீஹாரின் பேகுசராயில் முக்கியத்துவம் வாய்ந்த வேட்பாளார் ஆகிவிட்ட கன்கையாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பல இளம் அரசியல் தலைவர்களும் ஆதரவளித்து வருகின்றனர். குஜராத்தின் தலித் சமூகத் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, காங்கிரஸில் இணைந்து விட்ட ஹர்திக் பட்டேல் ஆகியோரும் கன்கையாவிற்காக பேகுசராயில் பிரச்சாரம் செய்துள்ளனர்.

அதோடு மட்டும் அல்லாது பாலிவுட் பிரபலங்களான சப்னா ஹாஸ்மி, அவரது கணவரான ஜாவீத் அக்தர், ஸ்வரா பாஸ்கர் ஆகியோரும் கன்கையாவிற்காகப் பிரச்சாரம் செய்ய உள்ளனர். வரும் ஏப்ரல் -29ல் பீஹாரில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது கவனிக்க தக்கது. எது எப்படியோ தேர்தலுக்கு பின்னும் இவரின் வருமானமோ சொத்தின் மதிப்பு என்று கணித்தால் மட்டுமே தெரியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

kanhaiya kumar unemployed but earned Rs.8.5 lakhs last 2 year

Kanhaiya Kumar, the country's most famous student leader who is taking on a minister of the richest party, has declared a humble figure of Rs. 8.5 lakh as his income for two years. The affidavit he filed for his nomination from Bihar's Begusara.
Story first published: Thursday, April 11, 2019, 17:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X