சூப்பர்லா நகர்புறங்களில் நடுத்தர மக்களின் வளர்ச்சி அதிகரிக்குமாம்.. குஷியில் நடுத்தர மக்கள்

மும்பை : நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக வளர்ச்சிகள் குறைந்தே காணப்பட்டாலும், ஹெச்.எஸ்.பி.சி ஒரு சர்வேயை வெளியிட்டுள்ளது. இதன் படி அடுத்த 12 மாதங்களில் நகர்புறங்களில் நடுத்தர மக்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை பொருளாதாரம் மற்றும் செலவுகள், நுகர்வு பொருட்களின் வளர்ச்சி இதன் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும். இதன்படி பல சுவாரசியமான விஷயங்களும் தெரியப்பட்டுள்ளன. மேலும் அடுத்த 12 மாதங்களில் எதிர்கால வருமானம் மற்றும் செலவினங்களும் அதிகரிக்கும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

சில நுகர்வோர் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் பொருளாதாரம் மந்தமாகவே இருக்கும் எனவும் அறிவித்திருந்தன. ஆனால் இந்த ஹெச்.எஸ்.பி.சியின் கருத்துக் கணிப்பின்படி அடுத்த 12 மாதங்களில் நகர்புறங்களில் நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி சாதகமான நிலையில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.

7 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ளவர்கள்

7 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ளவர்கள்

இந்த கருத்துக் கணிப்பின் ஒரு பகுதியாக, முக்கிய நகரங்களிலுள்ள நடுத்தர மக்களிடம், சுமார் 1000 மக்களிடம் இந்த கருத்துக் கணிப்பு கேட்கப்பட்டது. இதிலும் 7 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்களிடமே இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதிலும் அவர்களின் நுகர்வு பழக்க வழக்கம் பற்றிய 50 கேள்விகள் கேட்கப்பட்டன.

கிராமப்புறங்களில் மந்தமாக இருக்கும்

கிராமப்புறங்களில் மந்தமாக இருக்கும்

இதுவே கிராமப்புறங்களில் இந்த குறிப்பிட்ட வளர்ச்சி மந்தமாகவே இருக்கும். காரணம் கிராமப் புறங்களில் நிலவி வரும் வறட்சி மற்றும் சூழ் நிலைக் காரணிகள் காரணமாக இந்த வளர்ச்சி குறையும். இதனால் நுகர்வோர் சந்தைகளில் வர்த்தகம் குறையும், இதனால் பணப்புழக்கமும் குறையும்.

வரப்போகும் அரசு நடவடிக்கை எடுக்கும்

வரப்போகும் அரசு நடவடிக்கை எடுக்கும்

அதே சமயம் கிராமப் புறங்களிலும், மிக மிக குறைந்த வருவாய் உடைய நடுத்தர வர்க்கத்தினருடைய வருமானத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும், தற்போது தேர்தல் காரணமாக தேர்தலுக்கு பின் அந்த வருவாயை வரப் போகும் அரசு வருவாயை உயர்த்துவதில் கவனம் செலுத்தும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டூள்ளது.

வருமானம் கணிசமாக உயரும்

வருமானம் கணிசமாக உயரும்

கணக்கெடுப்பின் படி 80 சதவிகிதம் மக்கள், பொருளாதார வளர்ச்சி இருக்கும் என அடுத்த 12 மாதங்களில் இருக்கும் எனவும், 45 சதவிகித மக்கள் மிக வளர்ச்சி இருக்கும் எனவும் கூறியுள்ளனர். இதில் 41 சதவிகிதம் மக்கள் தங்கள் வருமானத்தில் 10சதவிகிதம் அதிகரிக்கும் எனவும், 39 சதவிகிதம் மக்கள் தங்கள் வருமானம் 5 சதவிகிதம் மட்டுமே உயரும் எனவும் அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் சில சுவாரஸ்யமான விஷயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உணவுக்கான ஆன்லைன் ஆர்டர்

உணவுக்கான ஆன்லைன் ஆர்டர்

நடுத்தர மக்களின் உணவு பழக்க வழக்கமும் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக உணவு டெலிவரி செய்யும் பல ஆப்கள் இருந்து வரும் இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் 77 சதவிகிதம் மக்கள் உணவு ஆர்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கின்றனர். 44 சதவிகிதம் மக்கள் வாரத்தில் ஒரு முறையாவது உணவு ஆர்டர் செய்துள்ளனர் என்பதே இதன் கணிப்பாகும். இவ்வாறு வீட்டில் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுகளில் பீஸ்ஸா முதலிடம் வகிக்கிறது. இந்திய உணவுகளையும் கூட பின்னுக்கு தள்ளி சீன உணவு முன்னிலை வகிக்கிறது.

அதிகரிக்கும் ஆன்லைன் ஷாப்பிங்

அதிகரிக்கும் ஆன்லைன் ஷாப்பிங்

மளிகை பொருட்கள் வாங்குவதில் கூட இந்த நடுத்தர மக்கள் தற்போது ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் வாங்குகின்றனர். அதிலும் 75 சதவிகித மக்கள் மிகப் பெரிய அளவிலான, மாடர்ன் ஷாப்பிங் மால்களிலேயே அல்லது பெரிய ஷாப்பிங் கடைகளிலேயே வாங்க விரும்புகின்றனர்.

தனிப்பட்ட வாகனம் வேண்டும்

தனிப்பட்ட வாகனம் வேண்டும்

இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையானவர்களில் தங்களுக்கான பராமரிப்பு பொருட்களை ஆயிர்வேதிக் பொருட்களை வாங்கவே விரும்புகின்றனர். இதில் 85 சதவிகிதம் மக்கள் கார் இல்லாதவர்கள், ஆனால் பொது போக்குவரத்தை தவிர தங்களுக்கு என தனிப்பட்ட போக்குவரத்துக்காக ஒரு வாகனம் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+