நாட்டின் அரிசி மற்றும் மாட்டிறைச்சி ஏற்றுமதி சரிவுக்ககு காரணம் என்ன - ஓர் அலசல்

கடந்த 2018-19ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் எருமை இறைச்சி மற்றும் அரிசி ஏற்றுமதி கடுமையாக சரிவடைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அத்தியாவசியப் உணவுப் பொருட்களான அரிசி மற்றும் இறைச்சி ஏற்றுமதி கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் கடும் சரிவை சந்தித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

நம் நாட்டின் சட்ட திட்டங்களின் படி பசு, காளை மாடு ஆகியவற்றின் இறைச்சி ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதால் ஏற்றுமதி குறைந்துள்ளதாக தெரிகிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது எருமை இறைச்சி 9.6 சதவிகிதம் குறைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யும் முக்கிய நாடான பங்களாதேஷ் அரிசி இறக்குமதியை குறைத்ததே ஏற்றுமதி சரிவுக்கு காரணம் என்று மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டம்

விலங்குகள் வதை தடுப்புச் சட்டம்

வட மாநிலங்களில் இறைச்சி சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் காளை, பசு, கன்றுக்குட்டி மற்றும் எருமை மாடுகளின் இறைச்சியை உண்பதையே வழக்கமாக கொண்டிருந்தனர். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தவரை விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. இதனால் இவ்வகையான இறைச்சி விற்பனை அமோகமாக நடந்து வந்தன.

பசு வதை தடுப்பு சட்டத் திருத்தம்

பசு வதை தடுப்பு சட்டத் திருத்தம்

முழுக்க முழுக்க இந்துத்வா கட்சியான பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த உடனேயே இந்துக்கள் புனிதமாக வணங்கும் பசு, காளை மாடு, கன்றுக்குட்டி ஆகியவற்றை கொல்வதை தடை செய்யும் விதமாக பசு வதை தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.

காட்டுமிராண்டித்தனம்
 

காட்டுமிராண்டித்தனம்

காளை, பசு, கன்றுக்குட்டி மற்றும் எருமை மாடுகளை கொல்வோரை பிடித்து தண்டிக்கவும் செய்தனர். அதுவும் பாஜக ஆளும் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பசு, கன்றுக்குட்டியை கொல்வோரை பிடித்து ஊர் மக்களின் முன்னிலையில் கடுமையாக தண்டிக்கவும் செய்தனர். அதற்கும் மேலாக அவர்களை கொல்லவும் செய்தனர்.

ஹோட்டல்களில் மாட்டிறைச்சி கிடையாது

ஹோட்டல்களில் மாட்டிறைச்சி கிடையாது

பாஜகவின் இந்த அடாவடியான செயல்களால் காளை, பசு கன்றுக்குட்டி ஆகியவற்றை கொல்வது ஓரளவு தடுக்கப்பட்டது. வடமாநில ஹோட்டல்களிலும் மாட்டு இறைச்சி கிடைப்பது அரிதாகவே உள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மாட்டு இறைச்சியின் அளவும் குறைந்தது.

கடந்த 2018-19ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் எருமை இறைச்சி மற்றும் அரிசி ஏற்றுமதி கடுமையாக சரிவடைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இறக்குமதியை குறைத்த பங்களாதேஷ்

இறக்குமதியை குறைத்த பங்களாதேஷ்

கடந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை) சுமார் 1.06 கோடி டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடும்போது இது சுமார் 9.4 சதவிகிதம் குறைவாகும். அதே போல் எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதி சுமார் 9.6 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யும் முக்கிய நாடான பங்களாதேஷ் அரிசி இறக்குமதியை குறைத்ததே ஏற்றுமதி சரிவுக்கு காரணம் என்று மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன.

எருமை மாட்டிறைச்சி

எருமை மாட்டிறைச்சி

நம் நாட்டு சட்ட விதிகளின் படி பசு, காளை மாடு மற்றும் கன்று குட்டி இறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் எலும்புடன் கூடிய எருமை இறைச்சி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எருமை இறைச்சி 20 சதவிகிதம்

எருமை இறைச்சி 20 சதவிகிதம்

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இறைச்சி உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. நாட்டின் மொத்த இறைச்சி உற்பத்தியில் கோழி இறைச்சிகளின் பங்கு சுமார் 48 சதவிகிதமாகவும், எருமை மாட்டு இறைச்சிகளின் பங்கு சுமார் 20 சதவிகிதமாகவும் உள்ளது.

11 மாதங்களில் கடும் சரிவு

11 மாதங்களில் கடும் சரிவு

கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதியின் அளவானது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது அதிகம் உயர வாய்ப்பில்லை என்று மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. அதை உறுதி செய்யும் வகையில் முதல் 11 மாதங்களில் எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதி 9.6 சதவிகிதம் சரிந்து 11.2 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s Rice, Meat Exports drop for April-Feb period says Govt

India's rice exports for April-February dropped 9.4 percent from a year earlier to 10.57 million tonnes and buffalo meat exports during the period dropped 9.6 percent from a year ago to 1.12 million tones, the Agricultural and Processed Food Products Export Development Authority said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X