மும்பை: கடந்த ஏப்ரல் 01, 2019 அன்றிலிருந்து H1-B விசாவுக்கான விண்ணப்பங்களை வாங்கத் தொடங்கியது அமெரிக்க தூதரகம். வரும் 2019 - 20 விசா ஆண்டுக்கு தற்போது விண்ணப்பங்களை வாங்கத் தொடங்கி இருக்கிறார்களாம்.
இந்தியாவில் ஒரு நிதி ஆண்டு என்பது எப்படி ஏப்ரல் 01 முதல் மார்ச் 30 வரை என இருக்கிறதோ அதே போலத் தான் இந்த அமெரிக்க விசா ஆண்டும்.
அமெரிக்க விசா ஆண்டு அக்டோபர் 01-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ம் தேதியில் முடிவடைகிறது. ஆக 2019 - 20 விசா ஆண்டு என எடுத்துக் கொண்டால் அக்டோபர் 01 2019 முதல் செப்டம்பர் 30 2020 வரை கணக்கிடப்படும்.
எத்தனை விசாக்கள்
இந்தியாவுக்கு வழங்கப்பட்ட H1-B விசா விசாக்களின் எண்ணிக்கை 65 ஆயிரம் மட்டுமே. அதோடு 20,000 H1-B விசா சிறப்புக் கோட்ட விசாக்களும் வழங்கப்படுகிறது. இந்த 20000 பேருக்கான கோட்டாவில் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும்.
6 மாதம் கழித்து
அடுத்த ஆறு மாதம் கழித்து அமெரிக்கா பயணப்பட விரும்புபவர்கள் தான் இப்போது இந்த விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். தற்போது இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட விசா எண்ணிக்கையை விட சுமார் மூன்று மடங்கு கூடுதலாக விண்ணப்பங்களை வாங்கிவிட்டதால் தற்போது H1-B விசா விண்ணப்பத்தை வாங்குவதில்லையாம். அதற்கான இணைய லிங்குகளையும் முடக்கி வைத்திருக்கிறார்களாம்.
2 லட்சம் பேர்
தற்போது வரை 2019 - 20 விசா ஆண்டில் அமெரிக்காவில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து மட்டும் 2.01 லட்சம் பேர் H1-B விசாவுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்களாம். இது கடந்த 2017 - 18 மற்றும் 2016 - 17 ஆண்டுகளை விட சுமார் 5 சதவிகிதம் அதிகமாம். ஏப்ரல் 01, 2019-ல் இருந்து ஏப்ரல் 05, 2019 வரை மட்டுமே வாங்கிய விண்ணப்பங்களை பரிசீலித்து தேர்வு செய்து வரும் அக்டோபர் 01 2019 முதல் அமெரிக்காவில் பணிபுரிவதற்கான உரிமங்கள் வழங்கப்படுமாம்.
கடந்த ஆண்டில்
கடந்த ஆண்டு ஏப்ரல் 06, 2018-ம் தேதியிலேயே H1-B விசாவுக்கான விண்ணப்ப இணைப்புகளை நிறுத்திக் கொண்டது அமெரிக்க தூதரகம். kஅடந்த ஏப்ரல் 2018-ல் அமெரிக்காவிலேயே மேற்படிப்பு படித்தவர்களுக்காக வழங்கப்படும் 20 ஆயிரம் H1-B விசாக்களுக்கு இதுவரை சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்களாம். 2016 - 17 விசா ஆண்டில் 2.36 லட்சம் பேர், 2017 - 18 விசா ஆண்டில் 1.99 லட்சம் பேர், 2018 - 19 விசா ஆண்டில் 1.90 லட்சம் பேர், 2019 - 20 விசா ஆண்டில் 2.01 லட்சம் பேர் விண்ணப்பித்தார்களாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications