அடடே ரியல் ஹீரோவான பாலிவுட் ஹீரோ.. நடிப்பில் மட்டும் அல்ல வரி செலுத்துவதிலும் கிங்க் தான் 'அமிதாப்'

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சினிமா துறையில் மட்டுமின்றி ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2018-19-ம் ஆண்டு நிதியாண்டின் தன்னுடைய வருமான வரியாக ரூ. 70 கோடி செலுத்தியுள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் தற்போது மிக பரவலாக பேசப்படுகிற ஒரு விஷயமாக உள்ளது.

வட இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தன் படத்தில் மட்டும் ஹீரோ அல்ல , ரியல் லைப்பிலும் ஹீரோதான் என்று நிரூபித்துள்ளார். ஏனெனில் கடந்த நிதியாண்டில் ரூ.70 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார். இதன் மூலம் இன்று பாலிவுட் வட்டாரத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே பேசப்படும் ஒரு நடிகராக உள்ளார். வரி செலுத்துவதில் மட்டும் அல்ல நாட்டு மக்களுக்காகவு நான் பாடுபடுவேன் என்பதை வெறும் வார்த்தையாய் மட்டும் கொண்ட நடிகர்களுக்கு மத்தியில் இன்று செயல் முறையில் நடைமுறைப் படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு காஷ்மீர் மாநித்தில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். ஜவான்களின் குடும்பத்தினருக்கும், அதோடு உத்திரபிரதேசம், மஹாராஷ்டிரா, மாநில விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன் தொகையினை செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

நாட்டு நலப்பணிகளில் அமிதாப்

நாட்டு நலப்பணிகளில் அமிதாப்

நடிகர் அமிதாப்பச்சன், பல்வேறு நாட்டு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில், உத்தரபிரதேசம் மற்றும் மகராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் ரூ.5 கோடி கடனை அடைத்தார். புல்மாவா தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார். மேலும் பீகார் மாநிலத்தில் முஷார்பர் பகுதியைச் சேர்ந்த 2,084 விவசாயிகளின் கடனை அடைத்தார்.

வரி ஆதாயம் தேடவில்லை

வரி ஆதாயம் தேடவில்லை

தொடர்ந்து இது போன்ற பல நிதியுதவிகளை அமிதாப்பச்சன் செய்து வந்தாலும், அதை வைத்து எந்த வரி ஆதாயத்தையும் அடைய விரும்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இதையடுத்து கடந்த நிதியாண்டில் மட்டும் (2018- 2019) ஆம் ஆண்டில் அமிதாப்பச்சன் ரூ.70 கோடி வரி கட்டி சாதனைப் படைத்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஹீரோ

பாலிவுட் சூப்பர் ஹீரோ

வயதானாலும் இப்போதும் பாலிவுட்டிள் சூப்பர் ஹீரோ அமிதாப் பச்சன் தான். தற்போது நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் அமிதாப், கடைசியாக நடித்த பட்லா என்ற த்ரில்லர் படத்தில் அமிதாப்பச்சன் மிக அழகாக நடித்திருந்தார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

நஷ்டத்தையும் சந்தித்தவர் தான்

நஷ்டத்தையும் சந்தித்தவர் தான்

தற்போது ரூ.70 கோடி வரி செலுத்தும் அளவுக்கு உயர்ந்துள்ள அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து கடனாளியாக மாறியவர் தான். கடந்த 1995-ம் ஆண்டு அமிதாப்பச்சன் கார்ப்பரேஷன் என்ற பெயரில் சினிமா நிறுவனத்தைத் தொடங்கி 'உல்லாசம்' தமிழ்ப் படம் உள்ளிட்ட பல படங்களை எடுத்தார். ஆனால், படங்கள் தோல்வியைத் தழுவ மேலும் கடனாளியானார். இதன் பின்னர் ஸ்டார் டி.வி.யின் 'குரோர்பதி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி கடனில் இருந்து மீண்டார். இப்போது, நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து மீண்டும் அமிதாப் முத்திரை பதிக்கத் தொடங்கியுள்ளார்.

வட இந்தியாவின் சூப்பர் ஸ்டார்

வட இந்தியாவின் சூப்பர் ஸ்டார்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் ஆவர். இவரின் திரைப்படங்கள் இந்திய மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்ப்பது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். மேலும் தென்னிந்தியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால், வட இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆவர்.

ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.10லட்சம்

ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.10லட்சம்

மேலும் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உயிரிழந்த அனைத்து ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கினார். இது போன்ற பல சேவைகளை பாரபட்சம் பாராமல் அனைத்து சமுதாய மக்களுக்கும் உதவிகளை செய்து வருகிறார்.

நடிகர்களுக்கு முன் உதாரணம்

நடிகர்களுக்கு முன் உதாரணம்

நடிகர் அமிதாப் பச்சன் 2018-2019 ஆம் ஆண்டுக்கான நிதி ஆண்டில் வருமான வரியாக ரூபாய் 70 கோடியை அரசுக்கு செலுத்தியுள்ளதாக நடிகர் அமிதாப் பச்சன் உதவியாளர் தெரிவித்துள்ளது மற்ற நடிகர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்றும், இதன் மூலம் அனைத்து நடிகர் நடிகைகளும் சரியான வரியினை செலுத்துவதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் செய்திகள் கூறுகின்றன.

வருமான வரி விலக்கு

வருமான வரி விலக்கு

அதே சமயம் நன்கொடைக்கு மத்திய அரசு முழு வருமான வரி விலக்கு அளித்துள்ள போதிலும் ரூபாய் 70 கோடியை அரசுக்கு வரி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் சேவையை பார்த்து மற்ற பாலிவுட் நடிகர் , நடிகைகளும் மக்களுக்கு தானாக முன் வந்து மக்கள் சேவைகள் செய்வதற்கு இனி வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+