டெக்ஸாஸ்: கினா டயானி குட்ரி (Gina Dianne Guidry). இந்த 52 வயது அமெரிக்க பெண், ஒருவரிடம் இருந்து ஒரு அமெரிக்க டாலரை திருடியதாகச் சொல்லி வழக்கு தொடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் "கினா ஒரு டாலர் திருடியது உறுதி செய்யப்பட்டது. எனவே அவருக்கு சில மாதங்கள் சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது" என தீர்ப்பும் வழங்கிவிட்டார்கள்.
அதற்குப் பின் ஜாமீன் வாங்க வேண்டும் என்றால் 12,000 அமெரிக்க டாலர் சுமார் (8.5 லட்சம் ரூபாய்) பிணைத் தொகையாக கொடுக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது நீதிமன்றம்.
பணம் வேண்டும்
இந்த சம்பவங்கள் அனைத்தும் டெக்ஸாஸ் நகரத்துக்கு அருகில் இருக்கும் ஆஸ்டின் பகுதியில் நடந்தது. கினாவுக்கு பணம் தேவைப் பட்டிருக்கிறது. அதற்காக ஒரு உணவு ட்ரக் இருக்கும் இடத்தில் உணவுக்காக நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்டுக் கொண்டே வந்திருக்கிறார்.
என்ன பிரச்னை
யாரும் கொடுக்கவில்லை. உணவு ட்ரக் உடைமையஸ்தர்களும் கண்டு கொள்லவில்லை. யாரும் உணவு கூட வாங்கித் தர தயாராக இல்லை. ஒருவர் தான் வாங்கிய உணவுக்கான பணம் போக மீத தொகையை உணவு ட்ரக்கில் இருந்து வாங்கும் போது, அந்த பாக்கி ஒரு டாலரை பிடுங்கிக் கொண்டு ஓடுகிறார் கினா.
காவலர்கள்
அப்போது அருகில் இருந்த ஆஸ்டின் பகுதி காவலர்கள் கினாவைப் பிடித்து விசாரித்த போது சம்பவத்தை அப்படியே சொல்கிறார். காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். நீதிமன்றம் மேலே சொன்ன படி சில மாத சிறை தண்டனை அல்லது 12,000 அமெரிக்க டாலர் பிணைத் தொகை கேட்டிருக்கிறது.
ஜாமீன் விமர்சனங்கள்
இப்படி ஒரு டாலர் திருட்டுக்கு 12,000 டாலர் பிணைத் தொகை கேட்பது, 100 டாலருக்கு 50,000 டாலர் பிணைத் தொகை கேட்பது எல்லாம், அமெரிக்க குடிமக்களாலேயே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிக் கொண்டே தான் இருக்கிறது. இந்த ஜாமீன் சட்டங்களை மாற்ற பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்துவருகிறார்கள்.
நிற வெறி
அதோடு இப்படி சம்பந்தமே இல்லாத பெரிய தொகைகளை ஜாமீனாக கேட்பது எல்லாம் இனம் பார்த்து, உடலின் நிறம் பார்த்து வேண்டும் என்றே செய்யப்படுகிறது எனவும் குற்றம்சாட்டி வருகிறார்கள் கொள்கை பிடிப்புள்ள அமெரிக்கர்கள்.


Click it and Unblock the Notifications