டெல்லி: டிஸ்னி இந்தியா நிறுவனத்தின் இந்திய பிராந்திய தலைவராக இருந்த அபிஷேக் மஹேஸ்வரி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இவர் டிஸ்னி இந்தியா நிறுவனத்தின் தலைவராக disney பிராண்டை வளர்த்தெடுப்பது, டிஸ்னியின் வியாபாரத்தை இந்தியாவில் பெருக்குவது, மற்றும் டிஸ்னி நிறுவனத்தின் ஒட்டு மொத்த இந்திய நிர்வாகத்தை பார்த்துக் கொள்வது என பெரிய பணி பொறுப்புகளைச் செய்திருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் தொடங்கப்பட்ட கல்வி சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூவில் (Byju) இணைந்திருக்கிறார்.
சர்வதேச தலைவர்
பைஜூ (Byju) ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் சர்வதேச தலைவராக (Global Head)-ஆக பொறுப்பேற்று இருக்கிறாராம். பைஜூ (Byju)-வை உலகம் முழுவதும் வளர்த்து எடுத்து, நல்ல அணிகளை வைத்து கட்டமைக்க அபிஷேக் மஹேஸ்வரி முழுமையாக உதவுவார், வழிகாட்டுவார் எனச் சொல்லி இருக்கிறது பைஜூ (Byju) நிறுவனம்.
முதல் வேலை
இவரது முதல் வேலையாக சிறப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் பிராந்தியங்களில், ஒரு நல்ல அணியை கட்டமைத்து பிசினஸை இன்னும் சிறப்பாக எடுத்துச் செல்வது தானாம். இவர் டிஸ்னி இந்தியாவிற்கு முன் குபேரா மெக்கன்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் ஒரு ஐஐடி டெல்லி பட்டதாரி. கொலம்பியா பிசினஸ் ஸ்கூலில் இருந்து தன்னுடைய எம்பிஏ பட்டத்தை பெற்று இருக்கிறார்.
பெருமை
அபிஷேக் மஹேஸ்வரியை பைஜூ (Byju)-க்கு அழைப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருடைய பணி அனுபவம், நிபுணத்துவம் அனைத்தையும் முறையாகப் பயன்படுத்தி பைஜூ (Byju) நிறுவனத்தை ஒரு உலக கல்வி சார்ந்த பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனமாக வளர்த்தெடுப்பார் என நம்புகிறோம்.
நம்பிக்கை
தற்போது பைஜூ (Byju)-க்கு இருக்கும் பயன்பாட்டாளர்களை அதிகப்படுத்துவது மற்றும் வியாபாரத்தை பெருக்கி லாபம் அடைய செய்வது என அனைத்தையும் செய்வார் என நம்புவதாக பைஜூ (Byju) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ரவீந்திரன் சொல்கிறார்.


Click it and Unblock the Notifications