மார்ச் மாத சில்லறை பணவீக்க விகிதம் 2.86 சதவிகிதமாக உயர்வு - ரிசர்வ் வங்கியின் இலக்கை தாண்டியது

மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட பணவீக்க தரவுகளை ஏப்ரல் 12ஆம் தேதி வெளியிட்டது. அதில் மார்ச் மாதத்தில் நுகர்வோர் பணவீக்க விகிதமானது கடந்த பிப்ரவரி மாதத்தைவிட சற்று அதிகரித்து 2.86 சதவிகிதமாக உயர்ந்து

டெல்லி: உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக மார்ச் மாதத்திய சில்லறை பணவீக்க விகிதம் சிறிது அதிகரித்து 2.86 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளிவிவரத்துறை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் சில்லறைப் பணவீக்க விகிதம் 2.57 சதவிகிதமாக இருந்த நிலையில் மார்ச் மாத பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சற்று பின்னடைவே.

மொத்த பணவீக்க குறியீட்டில் நான்கில் மூன்று பங்கைக் கொண்டுள்ள உற்பத்தி குறியீட்டு எண்ணானது பிப்ரவரி மாதத்தில் 0.3 சதவிகிதம் குறைந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. லோக்சபா நடைபெறும் சமயத்தில் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது ஆளும் கட்சிக்கு சற்று அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

முதல் கட்ட தேர்தல்

முதல் கட்ட தேர்தல்

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோளான பணவீக்க விகிதத்தை பிரதி மாதமும் மத்திய புள்ளியியல் துறை வெளியிடுவது வழக்கம். தற்போது லோக்சபாவுக்கு முதல் கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் மார்ச் மாத சில்லறை பணவீக்க விகிதம் வெளியிடப்பட்டுள்ளது.

கடனுக்கான வட்டி குறைப்பு

கடனுக்கான வட்டி குறைப்பு

பணவீக்க விகிதம் எதிர்மறையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்தோ என்னவோ, ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 புள்ளிகளை குறைத்துள்ளது. அதேபோல் வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டியையும் 0.25 புள்ளிகளை குறைத்துள்ளது.

சில்லறை பணவீக்கம் 2.86 சதவிகிதம்

சில்லறை பணவீக்கம் 2.86 சதவிகிதம்

மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட பணவீக்க தரவுகளை ஏப்ரல் 12ஆம் தேதி வெளியிட்டது. அதில் மார்ச் மாதத்தில் நுகர்வோர் பணவீக்க விகிதமானது கடந்த பிப்ரவரி மாதத்தைவிட சற்று அதிகரித்து 2.86 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் சில்லறை பணவீக்க விகிதமானது 2.57 சதவிகிமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பு

ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பு

நுகர்பொருட்களின் பணவீக்கத்துடன் தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலை குறைவால் நடுத்தர குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட் 0.66 சதவிகிதம் உயரக்கூடும். சில்லறை பணவீக்க விகிதத்தை 2 சதவிகிதத்திற்குள் கொண்டு வரும் நோக்கத்தில் தான் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது. ஆனால் அதற்கு மாறாக மார்ச் மாத சில்லறை பணவீக்க விகிதம் 2 சதவிகிதத்தை தாண்டியுள்ளது ரிசர்வ் வங்கியை யோசிக்க வைத்துள்ளது.

பருப்பு வகைகள் 2.25 சதவிகிதம்

பருப்பு வகைகள் 2.25 சதவிகிதம்

உணவுப் பொருட்களின் பணவீக்க விகிதத்தில் முக்கிய அங்கமான காய்கனிகளின் பணவீக்க விகிதமானது மார்ச் மாத வெயிலிலும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழங்கள் சுருங்கியதைப் போல் 5.88 சதவிகிதமாக குறைந்தது. அதேபோல் காய்கறிகளின் பணவீக்க விகிதமும் மார்ச் மாதத்தில் 1.49 சதவிகிதமாகவும், பருப்பு வகைகளின் பணவீக்க விகிதமானது 2.25 சதவிகிமாகவும் குறைந்துள்ளது.

எரிபொருட்கள் 2.42 சதவிகிதம்

எரிபொருட்கள் 2.42 சதவிகிதம்

வீட்டு உபயோகப் பொருட்களின் பணவீக்க விகிதமானது மார்ச் மாதத்தில் 4.93 சதவிகிதமாகவும், எரிபொருட்களுக்கான பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில் 2.42 சதவிகிதமாகவும் உள்ளது.

 தொழிற்சாலை உற்பத்தி சரிவு

தொழிற்சாலை உற்பத்தி சரிவு

பணவீக்க விகிதத்தில் முக்கிய அங்கமான தொழிற்சாலை பணவீக்க விகிதமானது கடந்த கடந்த பிப்ரவரி மாதத்தில் 0.1 சதவிகிதமாக இருந்தது. இது கடந்த ஜனவரி மாதத்திய 1.7 சதவிகிதத்தைக் காட்டிலும் குறைவானதாகும். அதேபோல் கடந்த 2018ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் தொழிற்சாலை பணவீக்க விகிதமானது 4.3 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்ச்சியான உற்பத்தி சரிவையே காட்டுகிறது.

முதலீட்டுக்கான ஆர்வம் குறைவு

முதலீட்டுக்கான ஆர்வம் குறைவு

தொழிற்சாலை பணவீக்க விகிதம் என்பது ஒட்டுமொத்த பணவீக்க விகிதத்தில் நான்கில் மூன்று பங்காகும். கடந்த பிப்ரவரி மாதத்தில் தொழிற்சாலை பணவீக்க விகிதமானது 0.3 சதவிகிதமாக உள்ளது. அதே சமயத்தில் கடந்த 2018ஆம் ஆண்டின் இதே காலத்தில் 8.4 சதவிகிதமாக இருந்தது. இது தொழிற்சாலைகளில் முதலீடு செய்யும் ஆர்வம் குறைந்ததையே காட்டுகிறது.

 மின்சாரம், சுரங்கத் துறை

மின்சாரம், சுரங்கத் துறை

மின்சாரம் மற்றும் சுரங்கத் துறையின் உற்பத்திய கடந்த பிப்ரவரி மாதத்தில் 1.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பணவீக்க குறியீட்டில் 14 சதவிகிதமாகும்.

விற்பனை மந்தம்

விற்பனை மந்தம்

நுகர்பொருட்களின் உற்பத்தியானது கடந்த பிப்ரவரி மாதத்தில் 1.2 சதவிகிதமே வளர்ச்சியடைந்துள்ளதை காட்டுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டின் இதே பருவத்தில் 7.5 சதவிகிதமாக இருந்தது. இது நுகர்பொருட்களின் மந்தமான விற்பனைப் போக்கையோ காட்டுகிறது.

ரியல் எஸ்டேட் துறை டல்

ரியல் எஸ்டேட் துறை டல்

மூலதனப் பொருட்களின் உற்பத்தியானது கடந்த பிப்ரவரி மாதத்தில் -8.8 சதவிகிதமாக எதிர்மறையில் (Negative) உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் 16.6 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது இது ரியல் எஸ்டேட் துறையின் மந்தமான போக்கையே பிரதிபலிப்பதை காட்டுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+