நீங்க மோடிஜிக்கு நெருக்கமானவரா.. அப்படின்னா உங்க வங்கி கடன் தள்ளுபடி தான்.. சொல்வது காங்கிரஸ்

டெல்லி : கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செய்வதாக ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி வரும் மோடி, தற்போது மோடிக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் நட்புறவோடு இருக்கும், பெருநிறுவனங்களுக்கும் அதன் முதலாளி வர்க்கங்களுக்கும் 5.5 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான அரசு என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஏற்கனவே பிரான்ஸ் ரஃபேல் ஒப்பந்தம் முடிவு செய்த பிறகு அனில் அம்பானி நிறுவனத்துக்கு ரூ.1,124 கோடி வரி தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டி அளித்தார்.

அதில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த 5 ஆண்டுகளில் தங்களுக்கு வேண்டிய, நெருக்கமான, நட்புறவான தொழிலதிபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்துள்ளது.

சுமார் ரூ.5.5 லட்சம் கோடி மோடி அரசில் தள்ளுபடி

சுமார் ரூ.5.5 லட்சம் கோடி மோடி அரசில் தள்ளுபடி

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.7 லட்சம் கோடி தள்ளுபடி செய்த நிலையில், அதில் மோடி அரசு மட்டும் ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஏறக்குறைய 80 சதவிகிதம் மோடி அரசில்தான் வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் மிகமோசமான உதாரணமாகும் என்றும் கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்க்.

கடன் தள்ளுபடி - மூலதனம் அதிகரிப்பு சூப்பர்லா?

கடன் தள்ளுபடி - மூலதனம் அதிகரிப்பு சூப்பர்லா?

இதில் சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் கடன் பெரு நிறுவன முதலாளிகளுக்காக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு லட்சம் கோடிகளில் கடனைத் தள்ளுபடி செய்து, பின் மூலதனம் என்ற பெயரில் மக்களின் வரி பணத்தையே மறுமுதலீடாக எடுத்து கொள்வது யாருக்கு என்ன பயன் ? இதனால் பா.ஜ.க அரசு என்ன செய்ய போகிறது.

முதலாளித்துவ அரசுக்கு விரைவில் முற்றுபுள்ளி

முதலாளித்துவ அரசுக்கு விரைவில் முற்றுபுள்ளி

மோடி ஒருபுறம் பெருநிறுவன முதலாளிகளுக்கு கடனைத் தள்ளுபடி செய்வதும், மறு புறம் முதலீட்டுக்கு வழி செய்வது போல் மக்களின் வரியினை திரட்டி கொடுப்பதும் வாடிக்கையான ஒரு விஷயமாக இருந்தாலும் இது ஒரு வகையில் நகைப்புக்குரியது, மோடியின் முதலாளித்துவ ஆட்சிக்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

பிரான்ஸ் வரை பரவிய  புகழ்

பிரான்ஸ் வரை பரவிய புகழ்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மோடியின் புகழ் இந்தியா மட்டும் அல்ல பிரான்ஸ் வரை பரவியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ரூ.1,124 கோடி வரி தள்ளுபடி செய்துள்ளது பிரான்ஸ் அரசு.

அடுத்து என்ன செய்யும் பாஜக அரசு

அடுத்து என்ன செய்யும் பாஜக அரசு

சராசரியாக ஆண்டுக்கு ரூ.ஒருலட்சம் கோடிக் கடன் பெரு நிறுவன முதலாளிகளுக்காக கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு லட்சம் கோடிகளில் கடனைத் தள்ளுபடி செய்தால், மறுமுதலீடு உருவாக்கத்துக்கு வரி செலுத்துவோரின் பணத்தை எடுத்தும் என்ன பயன்? பாஜக அரசு என்ன செய்யப் போகிறது?

வராக்கடன் வராமலேயே போய்விட்டது

வராக்கடன் வராமலேயே போய்விட்டது

மோடி ஒருபுறம் பெருநிறுவன முதலாளிகளுக்கு கடனைத் தள்ளுபடி செய்வதும், மறுபுறம் முதலீட்டுக்கு வழிவகை செய்வது போல் வரிப்பணத்தில் வங்கிகளுக்கு கொடுப்பதால் என்ன பயன்? இதனால் வாராக்கடன் என்பது வாராமலேயே போய்விடுகிறது. இது நகைப்புக்குரியது, மோசடியானது, மிகமோசமான கபடநாடகம். இரட்டை வேடத்துடன், இரட்டை குரலுடன் செயல்படும் இந்த அரசை தண்டிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நான் எண்ணுகிறேன் என்றும் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

சாமனிய மக்கள் மீது திணிக்க வேண்டாம்

சாமனிய மக்கள் மீது திணிக்க வேண்டாம்

மோடி அரசு எந்தெந்த நிறுவனங்களுக்கு, பெருமுதலாளிகளுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி செய்தது எனும் பட்டியலை வெளியிட வேண்டும். அதேசமயம் தங்களுக்கு தேவையான, நெருக்கமான பெருமுதலாளிகளுக்கு மட்டும் வங்கிக்கடனைத் தள்ளுபடி செய்துவிட்டு, சாமானிய மக்களின் மீது விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் திணிக்கக்கூடாது.


இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, தேர்தலை மனதில் வைத்து, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெருமுதலாளிகளுக்கு ரூ.1.56 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+