டெல்லி : காயினா? அதுவும் 10 ரூபாய் காயினா வேண்டாம் என்ற சொல்லை நம்மில் பலரும் கேட்டிருப்பீர்கள். நம்மில் பலர் நமது கைப்பையிலோ அல்லது பர்ஸிலோ நிறைய காசுகளை வைத்திருக்க யோசிக்கிறோம். ஏனெனில் அதை அதிகளவில் நம்மால் அதிக அளாவு கையில் வைத்துக் கொள்ளவும் முடியாது. அதை வைத்து பெரிய செலவுகளை செய்யவும் முடியாது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளூக்கு பின்னர் நாணயங்களின் புழகத்தை அதிகரிக்க அதிகளவில் நாணயங்கள் அச்சிடப்பட்டன. இது ஒரு புறமிருக்க கையில் பணத்த வைத்துக் கொள்ளவது குறைக்கப்பட்டு தற்போது டிஜிட்டல் பே முறைகள் அதிகரித்துள்ளன.
அதுவும் குறிப்பாக கூகுள் பே, பேடிஎம், போன் பீ உள்ளிட்ட டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளூம், அதேசமயம் வங்கிகளில் நெட் பேங்கிங்க் முறைகளும் அதன் சேவைகளும் மிக அதிகரித்திருக்கிறது. இதனால் மக்களின் கையில் பணம் பழங்குவது மிக குறைந்துள்ளது. பணத்திற்கே இப்படி யென்றால் நாணயங்களுக்கு சொல்லவா வேண்டும். அதற்கான தேவை மிக மிக குறைவாகவே உள்ளது.
பெரிய அளவில் சிக்கல் (ரிவர்ஸ் ப்ளே )
நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் காயின் மற்றும் கரன்சி பிரிவு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா இந்த நாணயங்களால் பெரிய அளவில் சிக்கலை சந்தித்துள்ளன. இந்த மத்திய வங்கி சந்திக்கும் பிரச்சனை ரிவர்ஸ் ப்ளோ என்றும் அழைக்கப்படுகிறது.
தனியார் துறையை நாட உள்ளது
இதையடுத்து தற்போது அரசு இந்த பிரச்சனையை சமாளிக்க, நாணயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கும் தனியார் நிறுவனங்களின் உதவியை நாட உள்ளது. இதோடு நம்முடைய நாணயங்களை பிரேசில் மற்றும் இலங்கை ,மாலத்தீவு உள்ளீட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது அதற்கான செயலில் இறங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி முன்னரே எச்சரிக்கை
அளவுக்கு அதிகமான நாணயங்களை புழக்கத்தில் விடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ரிசர்வ் வங்கி இதற்கு முன்னரே எச்சரிக்கை செய்திருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ரிசர்வ் பேங்க் இதுவரை 9பில்லியன் மதிப்பிலான நாணயங்களை சேமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
3ல்- 1 பங்கு ச்சடிக்க உத்தரவு
செக்கியூரிட்டி பிரிண்டிங்க் மற்றும் மிண்டிங்க் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவிற்கு நடப்பு ஆண்டிற்கான நாணயங்களை அச்சடிக்க ரிசர்வ் பேங்க் ஆணையிட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே கையிருப்பு அதிகம் இருப்பதால் அதன் மூன்றில் ஒரு பங்கினை அதாவது சுமார் 3400 மில்லியன் நாணயங்களை மட்டுமே அச்சிட கூறியுள்ளது.
பிரச்சனைகள் என்ன?
ரிசர்வ் பேங்க் அமைப்பால 9 பில்லியன் நாணயங்களை சேமிக்க இயலும்,ஆனால் அதற்கு மேல் உற்பத்தி அதிகரிக்கும் போது அதை சேமித்து வைப்பதற்கான கட்டமைப்பு வசதியோ, சேமிப்பு அறைகளோ இல்லை என்பது முதல் பிரச்சனையாக உள்ளது. நாணயங்களின் எடை காரணமாக அவற்றை டிஸ்ட்ரிபியூட் செய்வதும், ஏன் வெளி நாடுக்களுக்கு அனுப்பவதிலும் கூட பிரச்சனையாக உள்ளது. தற்போது உற்பத்தி செய்யப்படும் அளவை விட இன்னும் நாணயங்களின் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
புழகத்திலுள்ள நாணயங்கள் வெளியேற்றப்படும்
அச்சிடப்படும் நாணயங்களுக்கு நிகரான நாணயங்கள் புழகத்திலிருந்து வெளியேற்றப்படும் என்று கூறப்பட்டாலும் பற்றாக்குறை கருத்தில் கொண்டு இன்னும் அந்த திட்டம் நீறைவேற்றப்படாமலேயே உள்ளது என்றும் அவ்வமைப்பு கூறியுள்ளது. என்றைக்கு இருந்தாலும் ஒரு நாள் பண மதிப்பிழப்பை போல் இந்த காயிங்களூக்கும் வரும் என்பதில் சந்தேகமில்லை என் கிறார்கள் வல்லுனர்கள்.


Click it and Unblock the Notifications