கடைக்கு வந்த வாடிக்கையாளர்களரிடம் வாங்கிய காலணிகளை முழுமையாக பேக் செய்து, எடுத்துச் செல்ல வசதியாக கொடுக்கும் காகித பைகளுக்கு நபருக்கு 3 ரூபாய் என வசூல் செய்து வருகிறது Bata.
அந்த காகிதப் பையில் Bata-வின் பிராண்டும் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும். ஆக நுகர்வோர் காசிலேயே தனக்கான விளம்பரச் செலவுகளையும் சரி கட்டிக் கொண்டு தங்கள் Bata பிராண்டை வளர்க்கிறார்கள்.
இதை எதிர்த்து ஒரு தனி நபர் சண்டிகர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வாதாடி 4,000 ரூபாய் நஷ்ட ஈடும், 5,000 ரூபாய் நுகர்வோர் சட்ட உதவிக் கணக்கிலும் Bata நிறுவனத்தை டெபாசிட் செய்ய வைத்து இருக்கிறார்.
பிரச்னை
சந்திகரைச் சேர்ந்தவர் தினேஷ் பிரசாத் ராதுரி. கடந்த பிப்ரவரி 05, 2019 அன்று செக்டார் 22டி பகுதியில் உள்ள Bata-வின் அதிகார பூர்வ அவுட் லெட்டில் ஒரு ஜோடி காலனிகளை வாங்கி இருக்கிறார். காலணியின் விலை 399 ரூபாய் தான். ஆனால் 3 ரூபாய் கூடுதலாக பில்லில் காகிதப் பைகளுக்காக சேர்த்து, வசூலித்திருக்கிறார்கள். எவ்வளவோ பேசிப் பார்த்தும் காகித பைகக்கான கட்டணத்தை திரும்பக் கொடுக்கவில்லை.
வழக்கு
இந்த பிரச்னைக்கு தீர்வு காண தினேஷ் சந்திகர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் "Bata நிறுவனம் எங்களிடமே காகித பைகளுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் Bata நிறுவனத்தின் பெயரைம் பதித்து பிராண்டிங் செய்து கொள்கிறார்கள். இது ஏற்புடையது அல்ல" என வாதாடி இருக்கிறார்கள்.
நஷ்ட ஈடு
எனவே Bata நிறுவனம் என்னிடம் வாங்கிய 3 ரூபாய் உடன், குறையுடன் செய்த சேவைகளுக்கு ஒரு நல்ல நஷ்ட ஈட்டுத் தொகையையும் கொடுக்க வேண்டும் என வாதாடினார். இதற்கு Bata நிறுவனம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து. ஆனால் நீதிமன்றம் மசிவதாகத் தெரியவில்லை. ஆகையால் தீர்ப்பு Bata நிறுவனத்துக்கு எதிராக வந்திருக்கிறது.
தவறு தான்
ஒரு நிறுவனத்தின் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக காகிதப் பைகளையோ அல்லது பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையான வசதிகளை அவர்கள் தான் செய்துக் கொடுக்க வேண்டும். இந்தியாவில் அப்படித் தான் செய்து கொடுக்கிறார்கள். அந்த விஷயத்தில் Bata தவறி இருக்கிறது. எனவே இதை ஒரு சேவை குறைபாடாகவே பார்க்கிறது இந்த நுகர்வோர் நீதிமன்றம்.
1000 பைகள்
எனவே 1,000 காகித பைகளுக்கான பணத்தை (1000*3 = 3,000 ரூபாய்) தினேஷுக்கு நஷ்ட ஈடாகக் கொடுக்கச் சொல்லி இருக்கிறது. அதோடு தினேஷின் வழக்குச் செலவுகளுக்கு 1,000 ரூபாயையும் கொடுக்கச் சொல்லி இருக்கிறது. இது போக நுகர்வோர் நீதிமன்றத்தில் 5000 ரூபாயையும் மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு மையத்தின் சட்ட உதவிக் கணக்கில் டெபாசிட் செய்யுமாறும் தீர்பளித்திருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications