டெல்லி : இந்தியாவிலிருந்து எண்ணெய் வித்துக்களை இறக்குமதி செய்யும் நாடுகளான வியட்நாம், தென்கொரியா, தாய்லாந்து, தைவான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்திய எண்ணெய்களின் முக்கிய இறக்குமதியாளர்களாகும் கடந்த நிதியாண்டில், எண்ணெய் இறக்குமதி 31 சதவீதம் உயர்ந்து ரூ. 6,222 கோடியாக உயர்ந்துள்ளது.
2017-18 நிதியாண்டில் நாடு முழுவதும் 4,762 கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் வித்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்று சல்வென்ட் எக்ஸ்டார்கெர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (SEA) தரவு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 3.02 மில்லியன் டன் இருந்த ஏற்றுமதி, 2018-19- ம் நிதியாண்டில் ஏற்றுமதிகள் 6 சதவிகிதமாக அதிகரித்துள்ளன.
தென் கொரியா, வியட் நாம் மற்றும் தாய்லாந்து ஆகியவை நாடுகள் கடுகு இறக்குமதி செய்யும் நாடுகளில் முக்கிய நாடாகும். கடந்த நிதியாண்டில் 10,51,869 டன் கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு 6,63,988 டன் களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சோயாபீன் ஏற்றுமதி அதிகரிப்பு
இதே போல சோயாபீன்ஸ் ஏற்றுமதியும் கடந்த நிதியாண்டில்
13,37,215 டன் களாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு 11,87,818 டன் கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது.
அரிசி தவிடு & ஆமணக்கு ஏற்றுமதி குறைந்தது
அதேசமயம் அரிசி தவிடு ஏற்றுமதி குறைந்துள்ளது. அதுவும் வெறும் 4,40,927 டன் கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு 5,94,129 டன் களாக ஏற்றுமதி இருந்தது.
மேலும் ஆமணக்கு ஏற்றுமதி 3,67,084 டன் களாக குறைந்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 5,72,762 டன் களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய இறக்குமதியாளர்கள்
இந்தியாவிலிருந்து எண்ணெய் வித்துக்களை இறக்குமதி செய்யும் நாடுகளான தாய்லாந்து 6,15,403 டன்களையும், தென் கொரியா 7,38,795 டன்களையும், தாய்லாந்து 3,02,619 டன்களையும், தைவான் 1,19,794 டன்களையும் மற்றும் ஈரான் 5,08,050 டன்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற நாடுகள் இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்களின் முக்கிய இறக்குமதியாளர்களாகும்.
சோயாபீன்ஸ்காக காத்திருக்கு ஈரான்
ஈரானிய சந்தை மீண்டும் இந்திய சோயா பீன்ஸ் இறக்குமதிக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறது. கடந்த நிதியாண்டில் ஈரானில் 5 லட்சம் டன் சோயாபீன் உணவுகளை இறக்குமதி செய்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு மட்டும் 23,000 டன்கள் மட்டும் இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications